பக்கம் எண் :

376

     

இவனை அன்புடன் சூழ்ந்திருந்தனர். அவர் நடுவண் இருந்த கிள்ளி
உலோச்சனாரை வரவேற்றுப் பெரும் பொருளை வழங்குவானாய், மலையிற்
பிறந்த மணியும், காட்டிடத்துப் பெற்ற பொன்னும், கடலிற் பெறப்பட்ட
முத்தும், பல்வேறுவகை உடையும் பிறவுந் தந்து சிறப்பித்தான். அப்போது
அவர் கிணைப்பொருநன் ஒருவன் கூற்றில் வைத்த இப்பாட்டினைப் பாடினார்.
இதன்கண் பொருநன், தன் கிணைப் பறையைக் கொட்டி, அவியுண்ணும்
ஆன்றோர் காப்ப, அறம்புரியும் நெஞ்சினனாகிய கிள்ளி நெடிது வாழ்க என
வாழ்த்திய சான்றோர் வரிசைபெற்றுச் செல்வது கண்டு வியப்பு மிக்கு
மதிமழுங்கி நின்றான். அவனைக் கிள்ளி கண்டு “நீ சேய்நாடு செல்லும்
கிணைவன் போலும், நின்னையும் யாம் புரப்போம், கவலற்க” என வுரைத்து
மணியும் பொன்னும், முத்தும், உடையும் பிறவும் நிரம்ப நல்கினன். அவை
பெற்ற பொருநன், “நாடெனப்படுவது சோழன் நாடே; வேந்தெனப்படுபவன்
இராயசூயம்வேட்ட பெருநற் கிள்ளியே, ஆகவே, வேந்தே, நீ நெடிது வாழ்க”
என்று வாழ்த்தி யுள்ளான்.

 பனிபழுனிய பல்யாமத்துப்
பாறுதலை மயிர்நனைய
இனிதுதுஞ்சுந் திருநகர் வரைப்பின்
இனையலகற்றவென் கிணைதொடாக் குறுகி
 5.அவியுணவினோர் புறங்காப்ப
 அறநெஞ்சத்தோன் வாழ்நாளென்
றதற்கொண்டு வரலேத்திக்
கரவில்லாக் கவிவண்கையான்
வாழ்கவெனப் பெயர்பெற்றோர்
 10.பிறர்க்குவமந் தானல்லது
 தனக்குவமம் பிறரில்லென
அதுநினைந்து மதிமழுகி
ஆங்குநின்ற வெற்காணூஉச்
சேய்நாட்டுச் செல்கிணைஞணை
 15.நீபுரவலை யெமக்கென்ன
 மலைபயந்த மணியுங் கடறுபயந்த பொன்னும்
கடல்பயந்த கதிர்முத்தமும்
வேறுபட்ட வடையஞ் சேறுபட்ட தசும்பும்
கனவிற் கண்டாங்கு வருந்தாது நிற்ப
 20.நனவி னல்கியோ னசைசால் தோன்றல்
 நாடென மொழிவோரவன் நாடென மொழிவோர்
வேந்தென மொழிவோரவன் வேந்தென
                             மொழிவோர்
புகர்நுதலவிர் பொற் கோட் டியானையர்