| கவர்பரிக்கச்சை நன்மாவினர் | 25. | வடிமணி வாங்குருள | | கொடி மிசைநற் றேர்க்குழுவினர் கதழிசை வன்கணினர் வாளின் வாழ்ந ரார்வமொ டீண்டிக் கடலொலி கொண்ட தானை | 30. | அடல்வெங் குரிசின் மன்னிய நெடிதே. |
திணை: அது; துறை: வாழ்த்தியல்: சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியை உலோச்சனார் பாடியது.
உரை: பனி பழுனியபல் யாமத்து - பனி மிக்க பல யாமங்கள் உறங்கியதனால்; பாறு தலைமயிர் நனைய - பரந்து சிதறித் தோன்றும் தலைமயிர் பனியால் நனைந்துபடிய; இனிது துஞ்சும் திருநகர் வரைப்பின் - தான் இனிதுறங்கும் செல்வ மனையின்கண்; இனையல் அகற்ற - யான் எனது வறுமை வருத்தம் நீக்கக்கருதி; என் கிணை தொடாஅக் குறுகி - என் தடாரிப் பறையை இசைத்துக் கொண்டு சென்று; அவியுணவினோர் புறங்காப்ப அவியாகிய உணவை யுண்ணும் தேவர்கள் புறத்தே நின்று பாதுகாக்க; அறநெஞ்சத்தோன் நாள் வாழ என்று - அறஞ் செய்யும் நெஞ்சினையுடைய வேந்தன் பன்னாள் வாழ்வானாக என்று வாழ்த்த; அதற் கொண்டு வரல் ஏத்தி - அது கொண்டு வாழ்த்தி வந் தவர்களை அவன் வரவேற்க; கரவு இல்லாக் கவி வண்கையான் - இரவலர்க்கு மறைத்தல் இல்லாமல் இடக் கவிந்த வளவிய கையையுடையராதலால்; வாழ்க எனப்பெற்றோர் - நெடிது வாழ்க எனப் புலவர் வாழ்த்தும் வாழ்த்தாகிய பொருளைப் பெற்றோராகிய; பிறர்க்கு - ஏனை வேந்தர்கட்கு; தான் உவமம் அல்லது - இவ்வேந்தன் உவம மாவனே யன்றி; தனக்கு - இவ்வேந்தனுக்கு; பிறர் உவமம் இல்லென - ஏனைவேந்தர் உவமமாகும் ஒப்பும் உயர்பும் இலர் என்று சொல்லி வந்த சான்றோர் பலரும் பாராட்ட; அது நினைந்து மதி மழுகி - அப் பாராட்டைக் கேட்டு அறிவான் ஆராய்ந்த யான் அவனது பெருமை என் அறிவெல்லை யிறந்து விளங்குவதை நினைந்து மதிமயங்கி; ஆங்கு நின்ற என் காணூஉ - அவ்விடத்தே நின் றொழிந்த என்னைக்கண்டு; சேய்நாட்டுச் செல் கிணைஞனை - புரவலரை நாடிச் சேய்மையிலுள்ள நாடுகட்குச் செல்லும் கிணைப்பொருநனே; நீ எமக்குப் புரவலை என்ன - நீ மலையிடைப் பெறப்பட்ட மணிகளையும்; கடறுபயந்த பொன்னும் - காட்டிற் பெறப்பட்ட பொன்னையும்; கடல் பயந்த கதிர் முத்தமும் - கடலித்தே |