பக்கம் எண் :

378

     

பெறப்பட்ட ஒளியையுடைய முத்துக்களையும்; வேறுபட்ட உடையும் -
வேறு வேறு வகையவான உடைகளையும்; சேறுபட்ட தசும்பும்கள் நிறைந்த
குடங்களையும்; வருந்தாது நிற்ப - யான் இனி வறுமையுற்று வருந்தாமல்
செல்வ நிலையிலே நிலைநிற்குமாறு; நசைசால் தோன்றல் - அன்பு நிறைந்த
தோன்றலாகிய தலைவன்; கனவிற் கண்டாங்கு நனவில் யான் கொள்ளுமாறு
தந்தான்; நாடு என மொழிவோர்; அவன் நாடென மொழிவோர் - மிகச்
சிறந்த நாடாவது  அவனது  சோழ  நாடென்று  சொல்லுவர்;  வேந்தென
மொழிவோர் -வேந்தர்கள் பலருள்ளும் சிறந்த வேந்தரைத் தேர்ந்துரைப்பவர்;
அவன் வேந்தென மொழிவோர் - அவனொருவனையே சிறந்த வேந்தனென்று
சொல்வர்; புகர் நுதலவிர் பொற் கோட்டுயானையர் - புள்ளி பொருந்திய
நெற்றியும் விளங்குகின்ற கிம்புரியணிந்த கொம்பினையுமுடைய யானைப்படைத்
தலைவரும்; கவர்பரிக் கச்சை நன்மாவினர் - கதியும் சாரியையுமாகப் பகுக்கப்
படும் செலவினையும் கச்சிகையுமுடைய குதிரைப் படைத்தலைவரும்; வடிமணி
வாங்குருள -  வடித்த   வோசையையுடைய  மணியினையும்    வட்டமாக
வளைந்த உருளைகளையும்; கொடிமிசை  நல்தேர்க்  குழுவினர் - மேலே
கொடியையுமுடைய நல்ல தேர்ப்படைத்தலைவரும்; கதழிசை வனக்ணினர் -
விரைவும்  புகழும்  வன்  கண்மையுமுடைய  விற்படை  வேற்படைகட்குத்
தலைவர்களும்; வாளின் வாழ்நர் - வாள்கொண்டு போர் செய்து வாழும்
வாண் மறவருடைய தலைவரும்; ஆர்வமொடு ஈண்டி - ஆர் வத்துடடே
கூடியிருத்தலால்; கடல் ஒலி கொண்டதானை - கடலினது முழக்கத்தையுடைய
தானையையுடைய; அடல் வெங்குரிசில் - போரை வெல்லுதலின்
விருப்பமுடையனான  வேந்தனாகிய   தலைவன்;   நெடிது   மன்னிய -
நெடுங்காலம் வாழ்வானாக; எ - று.


      உறக்கத்திற் கழியும் இடையாமம் ரண்டும் “பல் யாமம்” எனப்பட்டன;
ஒன்றின் மிக்கனவாதலின் திருநகரென்றலின் அதற்கேற்ப சிறப்பித்தார். தான்
வறுமையால் வருந்தும் வருத்தத்தைப் போக்கும் கருத்தோடு வந்திருத்தலின்,
“இனைய லகற்ற” என்றான். தெய்வம் புறங்காப்பச் செல்வதோடு வழிவழி
சிறந்து பல்லாண்டு வாழ்க என வுயர்ந்தோர் வேந்தனை வாழ்த்துவது புறநிலை
வாழ்த்தெனும் மரபாதலால் “அவியுணவினோர் புறங்காப்ப அறநெஞ்சத்தோன்
வாழ நாள் என்று” வாழ்த்தினரென்றான்; “வழிபடுதெய்வ நிற்புங்காப்பப்
பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து, பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்து”
(தொல். செய். 109) என ஆசிரியர் உரைப்பது காண்க. பெயர், ஈண்டு வாழ்த்து
ரையாகிய பொருண்மேனின்றது. மக்களானும் பிறவுயிர்களானும் உண்டாகும்
துன்பங்கள் முன்னறிந்து காத்துக் கொள்ளும் ஆற்றலுடைய வேந்தருக்குத்
தெய்வத்தான் உண்டாவன அவ்வாறுகாக்கப்படாவாதலின்,