| | தென்பரதவர் மிடல்சாய வடவடுகர் வாளோட்டிய தொடையமை கண்ணித் திருந்துவேற் றடக்கைக் கடுமா கடைஇய விடுபரி வடிம்பின் |
| 5. | நற்றார்க் கள்ளின் சோழன் கோயிற் |
| | புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப் பனிக்கயத் தன்ன நீணகர் நின்றென் அரிக்கூடு மாக்கிணை யிரிய வொற்றி எஞ்சா மரபின வஞ்சி பாட |
| 10. | எமக்கென வகுத்த வல்ல மிகப்பல |
| | மேம்படு சிறப்பி னருங்கல வெறுக்கை தாங்காது பொழிதந் தோனே யதுகண் டிலம்பா டுழந்தவென் னிரும்பே ரொக்கல் விரற்செறி மரபின செவித்தொடக் குநரும் |
| 15. | செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும் |
| | அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும் மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும் கடுந்தெற லிராம னுடன்புணர் சீதையை வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை |
| 20. | நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின் |
| | செம்முகப் பெருங்கிளை யிழைப்பொலிந் தாஅங் கறாஅ வருநகை யினிதுபெற் றிகுமே இருங்கிளைத் தலைமை யெய்தி அரும்பட ரெவ்வ முழந்ததன் றலையே. |