| அரண்மனைக் கண்ணுள்ள; புதுப்பிறை அன்ன சுதைசெய் மாடத்து - புதிது முளைத்த பிறைபோன்ற வெள்ளிய சுதையால் இயன்ற மாடத்தையுடைய; பனிக்கயத்தன்ன நீணகர் நின்று - குளிர்ந்த நீர்நிலை போல் குளிர்ச்சி பொருந்திய நெடிய பெருமனையின் முன்னே நின்று; என் அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி - எனது அரித்த ஓசையைச் செய்யும் பெரிய தடாரிப்பறை கண் கிழியுமாறு கொட்டி; எஞ்சா மரபின் வஞ்சிபாட - வலிகுன்றாத முறைமையினையுடைய பகைமேற் செல்லும் செலவாகிய வஞ்சித்துறைப் பாட்டுக்களை இசைத்துப் பாட; எமக்கென வகுத்தவல்ல - எம்மைப் போலும் பரிசிலர்க் களித்தற்கெனச் செய்யப்படாதனவான; மிகப்பல - மிகப்பலவாகிய; மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை - மேன்மையான சிறப்பினையுடைய பெறற்கரிய அணிகலங்களும் பிற பொருள்களுமாகிய செல்வத்தை; தாங்காது பொழிதந்தோன் - எம்மால் தாங்கமாட்டாத அளவில் வழங்கினான்; இலம்பாடு உழந்த என் இரும்பேர் ஒக்கல் - வறுமைால் வருந்திய என் கூற்றத்தார்; அதுகண்டு - அக் கொடைப் பொருளைக் கண்டு பேரார்வத்தோடு தத்தம் கைக்கொண்டு; விரல்செறிமர பின - செவித் தொடக்குநரும் விரல்களில் அணியத் தகுவனவற்றைக் காதில் அணிபவரும்; செவித்தொடர் மரபின விரல்செறிக்குநரும் - செவியல் அணியத் தகுவனவற்றை விலலில் அணிபவரும்; அரைக்கமை மரபின மிடற்று யாக்குநரும் - அரைக்கு அமைந்தவற்றைக் கழுத்தில் அணிபவரும்; மிடற்றமை மரபின அரைக்கு யாக்குநரும் -கழுத்தில் அணிவனவற்றை இடையிற் கட்டிக்கொள்பவருமாய்; கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை - கடிய வலித்தகை அரக்ன் வௌவிய ஞான்றை - மிக்க வலியுடைய அரக்கனாகிய இராவணன் கவர்ந்து சென்றபோது; நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின் - சீதை கழற்றியெறிய நிலத்தே வீழ்ந்த அழகிய அணிகலன்களைக் கண்டெடுத்த குரங்கினுடைய; செம்முகப் பெருங்கிளை இழைப்பொ லிந்தாங்கு - சிவந்த முகத்தையுடைய மந்திகளாகிய பெரிய சுற்றம் அவ் விழைகளைத் தாம் அணிந்து விளங்கக் கண்டோர் சிரித்து மகிழ்ந்தாற்போல; இருங்கிளைத் தலைமை யெய்தி - பெரிய சுற்றத்துக்குத் தலைமை தாங்கி; அரும்படர் எவ்வம் உழந்ததன் தலை - அவர் வறுமைகளைதற் பொருட்டுப் பல அரிய நினைவுகளாலுண்டாகும் துன்பத்தால் வருந்தியது போக; அறாஅ அருநகை - இனிதுபெற்றிகும் நீங்காத அரிய மகிழ்ச்சியை மிகவும் அடைந்தோம்; எ - று.
தென்பரதவர், தென்பாண்டிநாட்டின் கடற்கரையிலிருந்து குறும்பு செய்தவர். இவர்கள் சில காலங்களில் பாண்டியர்க்குப் பகைவராகவும், சில காலங்களில் துணைவராகவும் இருந்துள்ளனர். வடுகர் தொண்டைநாட்டுத் |