அஃது இன்னாரைக் குறிக்கிறதென்றறிய         இயலவில்லை. டாக்டர். திரு.உ. வே.          சாமி நாதையர் வல்வேற்கந்தனென்று பாடங்கொண்டு கந்தனென்பது          நாஞ்சில்மலைத் தலைவர் பரம்பரையிலுள்ளானும் இப்பாட்டுடைத்          தலைவனுமாகிய ஒருவன் பெயர் என்று கூறியுள்ளார். இந் நூலாராய்ச்சிக்கு          கிடைத்த ஏட்டில் வல்வேற் சாத்த னல்லிசை யென்று காணப்படுகிறது. |   | தென்பவ்             வத்து முத்துப் பூண்டு             வடகுன் றத்துச் சாந்த முரீஇ             ................ங்கடற் றாணை             இன்னிசையை விறல்வென்றித் |  |  5. | தென்னவர்             வயமறவன் |  |   | மிசைப்பெய்தநீர்             கடற்பரந்து முத்தாகுந்து             நாறிதழ்க் குளவியொடு கூதளங் குழைய             வேறுபெ...................த்துந்து             தீஞ்சுளைப் பலவி னாஞ்சிற் பொருநன் |  |  10. | துப்பெதிர்ந்             தோர்க்கே யுள்ளாச் சேய்மையன் |  |   | நட்பெதிர்ந்             தோர்க்கே யங்கை நண்மையன்             வல்வேற் சாத்த னல்லிசை...................             ...................சிலைத்தார்ப் பிள்ளையஞ் சிறாஅர்             அன்ன னாகன் மாறே யிந்நிலம் |  |  15. |              இலம்படு காலை யாயினும் |  |   | புலம்பல்             போயின்று பூத்தவென் கடும்பே. |  
      திணை:                        அது. துறை: இயன்மொழி. நாஞ்சில் வள்ளுவனைக் கருவூர்க்          கதப்பிள்ளை பாடியது.
               உரை: தென்பவ்வத்து முத்துப்பூண்டு -         தெண்கடலிற் குளித்தெடுத்த          முத்துமாலை சூடி; வடகுன்றத்துச் சாந்தம் உரீஇ - வட்மலையிற் பெற்ற          சந்தனத்தை யணிந்து;................... கடல்தானை - கடல் போன்ற தானையையும்;                  இன்னிசைய விறல் வென்றி - இனிய புகழையுடைய போர் வென்றியையு          முடைய; தென்னவர் வயமறவன் - பாண்டியருடைய வலிமிக்க தானைத்          தலைவனும்; மிசைப் பெய்த நீர் மேலே - விசும்பிலிருந்து மழை பொழிந்த          நீர்;  கடல்  பரந்து  முத்தா  குந்து -  கடற்குட்  சென்று          முத்தாகும்;          நாறிதழ்க்குளவியொடு   கூதளங்   குழைய -  நறுமணம்           கமழும்          மலைமல்லிகையோடு கூதாளி தழைத்து விளங்க; வேறு பெ...துந்து-;          தீஞ்சுளைப்பலவின் நாஞ்சிற்பொருநன் - தீவியசுளைகளையுடைய பலா          மரங்கள் நிறைந்த நாஞ்சில்மாலையையுடைய வனுமாகிய தலைவன்; துப்பு          எதிர்ந்தோர்க்கு உள்ளாச் சேய்மையன் - வலிகொண்டு போர் செய்ய வரும்  |