பக்கம் எண் :

403

     
 பரந்தோ னெந்தை யாமெவன் றொமைலவதை
அன்னோனையுடையே மென்ப வினிவறட்
20கியாண்டு நிற்க வெள்ளி மாண்டக
 உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும்
தின்ற நண்ப லூஉன் றோண்டவும்
வந்த வைக லல்லது
சென்ற வெல்லைச் செலவறி யேனே.

     திணையுந் துறையு மவை. கரும்பனூர் கிழானைப் புறத்திணை
நன்னாகனார் பாடியது.

     உரை: மென்பாலான் - மென்புலமான மருதவயற்கண்; உடன் அணைஇ
- தன்   இனத்துடனே   மேய்ந்துண்டு; வஞ்கிக் கோட்டு உறங்கும் நாரை -
வஞ்சிமரத்தின்   கிளையின்கண்    தங்கியுறங்குதலைச்   செய்யும் நாரை;
அறைக்கரும்பின் பூ அருந்தும் - முற்றிய கரும்பினுடைய பூவைக் கொழுதும்;
வன்பாலான் - வன்புலமாகிய முல்லை நிலத்தின்கண் விளையும்; கருங்கால்
வரகின் அரிகால் கருப்பை அலைக்கும் பூழின்- கரிய தாளையுடைய வரகின்
அரிகாலின்கண் வாழும் எலியைப் பிடிப்பதற்கு முயலும் குறும்பூழ்ப்
பறவையின் ஆரவாரத்தால், அங்கண் குறுமுயல் வெருவ - அவ்விடத்தே
யுறையும் குறுமுயல் அஞ்சி யோட; அயல - அயலிடத்தே நிற்கும்;
கருங்கோட்டு இருப்பைப்பூ உறைக்குந்து - கரிய கிளைகளையுடைய
இருப்பை மரத்தின் பூக்கள் உதிரும்; விழவின்றாயினும் - விழாவென்றும்
நிகழா வழியும்; உழவர்மண்டை - உழவருடைய வுண்கலத்தில்;
இருங்கெடிற்று மிசையொடு - பெரிய கெடிற்று மீனாகிய உணவுடனே;
பூக்கள் வைகுந்து இஞ்சி முதலிய பூ விரவிய கள் நிறைந்திருக்கும்;
கரும்பனூரன் கிணையேம் - கரும்பனூர் கிழானுடைய கிணைவ ராவோம்;
பெரும - பெருமானே; நெல்லென்னாம் பொன் னென்னாம் - நெல்லும்
பொன்னும் என்னவாகும்; கனற்றக் கொண்ட நறவு என்னாம் - உடல்
வெதும்புமாறு கொண்ட கள்ளுந்தான் என்ன பயனுடைத்தாம்;............
மனைமன்னா அவை பலவும் - மனையிடத்து இல்லாத அவை
பலவற்றையும்;யான் தண்டவும் - யான் குறைபடவும்;தான் தண்டான் -
தான் சிறிதும் குறைவிலனாய்; நிணம் பெருத்த கொழுஞ்சோற்றிடை - நிணம்
கலந்த கொழுவிய பெய்து; மண் நாணப் புகழ் வேட்டு - மண்ணவர் கண்டு
நாணும்படியாகப் புகழைச் செய்து; புரந்தோன் - எம்மை விரைந்தேற்று
ஆதரிப்பன்; எந்தை - எங்கள் தலைவன்; யாம் தொலைவதை எவன் -
யாங்கள் வறுமை குறித்து