| சிறப்பை இவர் குறித்தபடியே இப் பாட்டுரையின் முன்னுரைக்கண் கூறினாம். கொடைநலம் குறிக்கும் வகையில் கரும்பனூரன் தந்த நெல்லும் பொன்னும் நறவும் பிறவும் சுருங்கக் குறித்து,நிணத்தோடு கூடிய சோற்றில் நீரென்னுமாறு நெய்யைச் சொரிந்து, தன்பால் வந்த னிணைப்பொருநருக்கு உணவளித்து விருந்தோம்பிய சிறப்பை, நிணம் பெருத்த...புரந்தோன் எந்தை என்று கூறியுள்ளார். இச் செயலால் கரும்பனூரனுக்கு உண்டாகிய பயன் பெரும்புகழ் என்பார், மண்ணாணப் புகழ்வேட்டுப் புரந்தான் என்றார். உண்பனவும் தின்பனவும் உடுப்பனவும் குறைவின்றிப் பெறு மிடத்து வாழ்க்கையைப் பற்றிய நினைவே மறந்து போயிற்றென அவனது கொடைநலத்தைத் தாம் நுகர்ந்த வாற்றை விளக்கி,வறுமையைப் புறங்கண்டு பெருமித முற்ற நிலையை,வறட்கு யாண்டு நிற்க வெள்ளிஎன்று வெளிப்படுத்தியுள்ளார்.வந்த வைகல் அல்லது சென்ற வெல்லைச் செலவறியேனே என்றது, வாழ்க்கையைப் பற்றிய நினைவு மறந்து கிடந்ததற்குச் சான்றாயிற்று. இத்துணையும் கிணைப்பொருநன் கூற்றில் வைத்துக் கூறியது குறிக்கொள்ள வேண்டுவதொன்று. பாணன் கூற்றாகவும் கிணைவன் கூற்றாகவும் கூறும் புலமை வகையை யறியாது வேறுபடக் கூறுவர் தமிழறியாதார். ---
385. அம்பர்கிழான் அருவந்தை அம்பர் என்பது சோழநாட்டில் தஞ்சை மாநாட்டில் நன்னிந்தாலுகாவில் உள்ளதோரூர்.இஃது இருவந்தை யென்னும் தலைவன் ஒருவனுக்கு உரியது. இவனைத் திவாகரமுடையார்கற்ற நாவினன் கேட்ட செவியினன்,முற்றவுயர்ந்த மூதறிவாளன், நாகரிகநாட்டத்தாரியன் அருவந்தை யென்றும்,நாடே பிறர்நாட்டிற் குவமையாறே, காலமறிந்துதவுங்காவிரி. தானே, ஆடவர் திலகமை்பர் மன்ன, னீடிசைத் தலைவன் அருவந்தை யென்றும் குறித்துரைத்துள்ளார். இதனால் அம்பர் காவிரி பாயும் நாட்டில் உள்ளதோரூரெனவும், அவ்வூர்த் தலைவனான அருவந்தை கல்வி கேள்விகளால் நிறைந்தவன் எனவும், முழுதுணரும் ஒண்புலவனெனவும் கண்ணோட்டமுடைய காவலனெனவும் அறியலாம். இவனது அழியாப்புகழ் அவ்வூர்க்கே பேரணியாய் நின்று பிரிவின்றி இயலுவதாயிற்று; ஆகவே, இடைக்காலத்தில் இவ்வூர் அம்பர் அருவந்தையெனவே வழங்குவதாயிற்று; உய்யக் கொண்டார் வளநாட்டு அம்பர்நாட்டு அம்பர் அருவந்தை (A. R. No. 175 of 1927-8) எனத் திருப்பழனத்துக் கல்வெட்டொன்று கூறுவது காண்க. இந்த அருவந்தையின் குடிப்பிறந்தவர் பிற்காலத்தே தொண்டைநாட்டில் இருந்திருக்கின்றனர். பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விளங்கிய கோப்பெருஞ்சிங்கன் காலத்தின். வந்த வாசிக் கண்மையிலுள்ள பொன்னூரில் அருவந்தை யொருவன் இருந்துள்ளான் என அவ்வூர்க் கல்வெட்டுக் கூறுகிறது. அது பொன்னூரான அழகிய சோழநல்லுார் அருவந்தை ஆண்டான் திருச்சோற்றுத் துறையுடையான் சொறப்பிள்ளை (S. I. Ins. Vol. XII. No.220) என வருவது காண்க. இந்த அருவந்தைக்குடி முதல்வனான அம்பர் அருவந்தையைக் கல்லாடனாரென்னும் சான்றோர் இப் பாட்டில் வியந்து பாராட்டியுள்ளார். ஒருகால் கல்லாடனார் அம்பருக்குச் சென்று அங்கு வாழ்ந்த செல்வன் ஒருவனைப் பாடலுற்றார். அவன் மனைக்கு அண்மையில் அருவந்தையின் பெருமனையும் இருந்தது. அவர் பாடிய பாட்டிசை |