| பகடு பல வாழ்த்தி - எருதுகளாகிய செல்வத்தை வாழ்த்தி; தன்கடைத் தோன்றிற்றுமிலன் - யான் அவன் பெருமனை முற்றத்துக்குச் சென்றி லேன்; பிறன் கடை அகன்கண் தடாரிப்பாட்டு கேட்டு - பிறன்மனை முற்றத்தில் நின்றுகொட்டிய அகன்ற கண்ணையுடைய தடாரிப்ப றையினது ஓசையைக் கேட்டு; அருளி - அருள் கூர்ந்து; யான் வறன் நீங்கல் வேண்டி - யான் வறுமையின் நீங்குதலைத்தான் விரும்பி; என் அரை நிலந் தினக் குறைந்த சிதாஅர் களைந்து- என் அரையில் யான் உடுத்திருந்த மண் தின்னம்படி பழைதாய்க் கிழிந்திருந்த உடையை நீக்கி; வெளியது உடீஇ - வெள்ளிய ஆடைதந்து உடுப்பித்து; என்பசி களைந்தோன் - எனது பசித்துன்பத்தைப் போக்கினான்; காவிரி அணையும் தாழ்நீர் படப்பை - காவிரியாறு பாயும் தாழ்ந்த நிலப்பாங்கினையுடைய தோட்டங்களையும்; நெல்வினை கழனி - நெல்விளையும் கழனிகளையு முடைய; அம்பர் கிழவோன் - அம்பரென்னும் ஊர்க்குரியோனாகிய; நல் அருவந்தை - நல்ல அருவந்தை யென்போன்; புல்லிய வேங்கடவிறல் வரைப்பட்ட - புல்லி யென்பவனுடைய வேங்கட மலையிற் பெய்த; ஓங்கல் வானத்து உறையினும் பல வாழியர் - உயர்ந்த வானத்திலிருந்து பொழிந்த மழைத்துளியினம் பல ஆண்டுகள் வாழ்வானாக; எ - று.
வெள்ளி முளைத்தலும் புள்ளுக்குரல் தோன்றலும் விடியற்காலத்துக் காட்சியாதலின்,அவற்றை யெடுத்தோதினார்.வெள்ளியு மிருவிசும் பேர்தரும் புள்ளு, முயர்சினைக் குடம்பைக்குரல் தோன்றினவே (புறம். 397) என்று பிறரும் கூறுதல் காண்க.இயைபில்லாத என் பால் அன்பு செய்தான் என்றற்குத் தன்கடைத்தோன்றிற்றுமிலனே என்றும், அருளி யென்றும் கூறினார், காவிரியிற் பிரிந்தோடும் அரிசிலாறு அம்பர்க்கருகிலோடு கின்றதாகலின். அதனைக் காவிரி யென்றார். சோழநாட்டின் அம்பர்ப் பகுதி நோக்கி ஆறு ஓடிவருதலின், அது தாழ்ந்திருக்கும் பான்மை குறித்து தாழ்நீர்ப் படப்பை யெனப்பட்டது. புல்லியென்பவன் கள்வர் கோமான் என்றும், வேங்கடமலை அவற்கு உரித்தென்றும் சான்றோர் பலரும் கூறுப்.தோன்ற, இயம்ப,வாழ்த்தித் தோன்றிற்றுமிலன்; கேட்டு அருளி,வேண்டி,களைந்து,உடீஇக் களைந்தோன், கிழவோன்; கிழவோனாகிய அருவந்தை, உறையினும் பல வாழியர் எனக் கூட்டி வினை முடிவு செய்க.
விளக்கம்: வாழ்த்தியலை அலங்குகதிர் (புறம். 375) என்ற பாட்டுரை விளக்கப்பகுதியிற் கூறினாம். அம்பர்கிழான் அருவந்தையின் கொடைநலத்தை முதற்கண்ணோதி அவனை வாழ்த்தும் வாழ்த்துரையினைப் பின்னர்க் கூறியுள்ளார். யான் வறனுற்று வருவதை யான் உரையாமே முன்னறித் தழைத்து,யான் வறுமையின் நீங்குதலை அவன் தானே விரும்பிய புத்தாடை யுடு்ப்பித்துப் பசி களைந்தான், என்பது அருவந்தையின் சிறந்த கொடைநலத்தை விளக்கி நிற்கிறது. மாற்றுடையின்மையின் அழுக்கேறி மட்சிக் கிழிந்து குறைந்திருந்த பீறல்உடை யென்றற்கு நிலந்தினக் குறைந்த சிதாஅர் என்றார். காவிரியிற் பிரிந்துவருதலின், |