பக்கம் எண் :

408

     

அம்பர் அருகே யோடிவரும் அரிசிலாற்றைக் காவிரி யென்றார். கல்லாடனார்
திருவேங்கட நாட்டுக்குரியவராதலின், காவிரி மணலினும் பலவென்னாது,
வேங்கடமலையிற் பெய்த மழைத்துளியினும் பல வாழ்க எனவாழ்த்து
வாராயினர்.ஒருவன் தன்னாட்டினின்றும் நீங்கி நெடிது செல்லச் செல்ல,
அவன் பிறந்த நாட்டுத் தொடர்பு அவனை யறியாதே பிணித்து நிற்குமென
அறிக. அதனை ஆங்கில நாட்டுக் கவிகளிடையே பரக்கக் காணலாம்.

---
386. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

     சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனால் பெரிதும் ஆதரவு
செய்யப் பெற்றவர் ஆசிரியர் போவூர் கிழாராவர். ஒருகால் சான்றோரிடை
வெள்ளி மீனினது நிலைபற்றியொரு பேச்சு நிகழ்ந்தது. வெள்ளிமீன்
தெற்கேகின்நாட்டிற்கு வறனுண்டாகும்; நல்லுயிர்கள் உணவின்றி வாடும்
என்பது வான நூன்முடிபு.அக்காலக் கோவூர் கிழார் தமக்குக் குளமுற்றத்துத்
துஞ்சிய சோழன் கிள்ளிவளவன் செய்த உதவிகளை விரிய எடுத்தோதித்
தாம் அவனுடைய பொருநரென்றும், அவன் தமக்கு வேண்டியவற்யைக்
குறிப்பானுணர்ந்து உதவுவன் என்றும், அதனால் தான் வெள்ளியது
நிலையைப்பொருளாகக் கருதுவதில்லையென்றும் இப்பாட்டால் உரைத்தார்.
இதன்கண் தொடக்கத்தில் சோழனது கொடை நலமும் பின்பு நாட்டின்
நலமும் அழகுறக் கூறப்பட்டுள்ளன.

 நெடுநீர நீறைகயத்துப்
படுமாரித் துளிபோல
நெய்துள்ளிய வறைமுகக்கவும்
சூடு கிழித்து வாடூன் மிசையவும்
5ஊன்கொண்ட வெண்மண்டை
 ஆன்பயத்தான் முற்றழிப்பவும்
வெய்துண்டவியர்ப் பல்லது
செய்தொழிலான் வியர்ப்பறியாமை
ஈத்தோ னெந்தை யிசைதன தாக
10வயலே, நெல்லின் வேலி நீடிய கரும்பின்
 பாத்திப்பன்மலர்ப் பூத்த தும்பின்று
புறவே, புல்லருந்து பல்லாயத்தான்
வில்லிருந்த வெங்குறும்பின்று
கடலே, காறந்த கலனெண்ணுவோர்
15கானற் புன்னைச் சினை யலைக்குந்து
 கழியே, சிறுவெள் ளுப்பின் கொள்ளை சாற்றி
பெருங்க னன்னாட்டுமணொலிக் குந்து
அன்னநன் னாட்டுப்பொருநம் யாமே