பக்கம் எண் :

409

     
 பொராஅப்பொருநரேம்
20குணதிசை நின்று குடமுதற் செலினும்
 குடதிசை நின்று குணமுதற் செலினும்
வடதிசை நின்று தென்வயிற் செலினும்
தென்றிசை நின்று குறுகாது நீடினும்
யாண்டு நிற்க வெள்ளியாம்
25வேண்டிய துணர்ந்தோன் றாள்வா ழியவே.

     திணையும் துறையு மவை. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய
கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது.

     உரை: நெடுநீர் நிறைகயத்து - மிகக் நீர்நிறைந்த நீர்நிலையின் கண்;
படுமாரித் துளிபோல - வீழ்கின்ற மழைத்துளிபோல; நெய் துள்ளிய வறை
முகக்கவும் - நெய்யினது துளியையுடைய வாய் வறுக்கப்பட்ட வறுவல்களை
முகந்துண்ணவும்; சூடுகிழிந்து வாடூன் மிசையவும் - சூட்டுக்கோலாற் கிழித்துச்
சுடப்பட்டவூனைத் தின்னவும்; ஊன்கொண்ட வெண்மண்டை - ஊனைப்
பெய்துவைத்த வெள்ளிய மண்டையானது; ஆன்பயத்தான் முற்றழிப்பவும் -
ஆவின்பால் நிறைந்த வழியவும்; வெய்துண்ட வியர்ப்பல்லது - உண்
பனவற்றைச் சுடச்சுடவுண்டு வியர்த்தலையன்றி; செய்தொழிலான்
வியர்ப்பறியாமை - தொழில்செய்து மெய் வருந்தி வியர்வை கொள்ளா
வண்ணம்; இசை தனதாக ஈத்தோன் -உலகில் நிலைபெறும் புகழ்
தனக்கேயுரியதாமாறு கொடுத்தான்; எந்தை - எங்கள் தலைவன்; வயல் -
நெல் வயல்; நெல்லின் வேலி நீடிய கரும்பின் பாத்தி - நெல்லுக்கு வேலி
போல நெடிது வளர்ந்து நின்ற கரும்பு நடுதற்கிட்ட பாத்தியின் கண்;
பன்மலர் பூ ததும்பின்று - பல்வகைப் பூக்கள் நிறைந் திருக்கும்; புறவு -
முல்லைக்காடு; புல்லருந்து பல்லாயத்தான் - புன்மேயும் பலவாகிய
ஆனிரைகளுடைனே; வில் இருந்த வெங்குறும்பின்று - வில் வீரர்கள்
காவலிருந்த வெவ்விய அரணுடை தாயிருக்கும்; கடல் கடல்சார்ந்த
நெய்தற்பகுதி; கால்தந்த கலன் எண்ணுவோர் - காற்றாற் கொணரப்பட்ட
மரக்கலங்களை யெண்ணும் மகளிர் தங்கும்; கானற் புன்னைச் சினை
அலைக்குந்து - கானற் சோலையிலுள்ள புன்னையின் கிளைகள்
கடலலையால் அலைப்புண்டிருக்கும்; கழி - கழிசார்ந்த பகுதி; சிறு
வெள்ளுப்பின் கொள்ளை சாற்றி - சிறிய வெண்மையான உப்பின்
விலையைச் சொல்லி; பெருங்கால் நன்னாட்டு உமண் ஒலிக்குந்து - பெரிய
மலைகள் பொருந்திய நல்ல நாடுகட்குக் கொண்டுசென்று விற்கும் உமணர்
குடி தழைத்திருக்கும்; யாம் அன்ன நன்னாட்டுப் பொருநம் - யாங்கள்
அத்தகைய நல்ல நாட்டுப் பொருநராவோம்; பொராஅப் பொருநரேம்