பக்கம் எண் :

410

     

பொருநருள்ளும் யாங்கள் போருடற்றும் பொருநரல்லேம்; குணதிசை நின்று
குடமுதற் செலினும் - குடதிசை நின்று குணமுதற் செலினும்;கீழ்த்திசையினின்று
மேற்றிசைக்கும் மேற்றிசையினின்று கீழ்த்திசைக்கும் சென்றாலும்; வடதிசை
நின்று தென்வயிற் செலினும் - வடக்கிலிருந்து தெற்கேகுமாயினும்; தென்றிசை
நின்று குறுகாது நீடினும் - தெற்கிற் சின்னாள் இராது பன்னாள் நெடிது
நிற்குமாயினும்; வெள்ளியாண்டும் நிற்க - வெள்ளியாகிய மீன் எங்கு
நிற்பினும் நிற்க; யாம் வேண்டிய துணர்ந்தோன் தாள் வாழிய - யாம்
வேண்டுவனவற்றை எம் குறிப்புக்கண் டுணர்ந்து அவ்வளவும் நல்கு
வோனாகிய வளவனுடைய தாள் வாழ்க; எ- று.


     நெடுநீர், ஆழமான நீர் நிறைகயத்தில் மழை பெய்யுங்கால் நீர்த் துளி
துள்ளித்    துளிப்பது   போலக்   காய்ச்சிய   நெய்யில்   வறுவல்களைப்
பொரிக்குமிடத்து அது துள்ளித் துளிக்குமாதலின் அதனைச் செய்யும்
வறுவலை “நெய் துள்ளிய வறை” யென்றார்.நெய்யில் வறுத்த வறையின்கண்
நெய்த்துளிகள் நிறைந்திருப்பதுபற்றி இவ்வாறு கூறினாரெனினும் அமையும்.
வறுக்கப்படுவது வறை: அறுக்கப்படுவது அறையென்றாற்போல. வறைகள்
கைந்நிறைய முகந்து உண்ணப்படுவதனால் “முகக்கவும்” என்றார். சூட்டுக்
கோலாற் கிழித்துச் கூடப்படும் ஊன், “சூடுகிழித்து வாடூன்” எனப்பட்டது.
மண்டை,  உண்கலம்.  அது   நிரம்பி   வழியுமளவு   ஆன்பால்
சொரியப்படுமாறுதோன்ற, “ஆன்பயத்தான் முற்றழிப்பவு” மென்றார்.
மெய்வருந்த உழையாமல் வேண்டுவன பெற்றுண்டற் கேற்ற பெருஞ்
செல்லும் தந்தமை கூறுவார், “வெய்துண்ட வியர்ப்பல்லமு செய்தொழிலான்
வியர்ப்பறியாமை யீத்தோன்” என்றார், ஈவார்மேல் புகழ் நிற்குமாகலின்; ஈத்த
வளவற்கே இசையுரிய தாயிற்றென்பது “இசை தனதாக” எனப்பட்டது. வயல்
பூத்ததும்பின்று, புறவு வெங்குறும்பின்று, கடல்புன்னைச்சினையலைக்குந்து கழி
உமண்  ஒலிக்குந்து  என  இயையும்.  கொள்ளை, விலை. “சில்பதவுணவின்
கொள்ளை சாற்றி” (பெரும்பாண். 64) என்புழிப்போல. பொருநர் போர்செய்யும்
மறவர்க்கும்    போர்க்கள   ஏர்க்களங்களைப்   பாடும்    பொருநர்க்கும்
பொதுப்பெயராகலின் போர்செய்யும் பொருநரினீ்ககுதற்கு “பொருநம் யாம்”
என்றவர்,“பொரா அப் பொருநரேம் என்றார். வெள்ளி  நிற்றற்குரிய
நிலைகளெல்லாம் சொன்னவர், “யாண்டும் நிற்க” என்று மறுபாடியும்
சொன்னது யாப்புறவுகுறித்துநின்றது. தாம் வளவனது தாணிழல் வாழும்
செமம்ாப்புத்தோன்ற இங்ஙனம் கூறியவர், அதனை நல்கும் அவன் தாளை
“தாள்வாழிய” என வாழ்த்தினார், முகக்கவும் மிசையவும் முற்றழிப்பவும்,
வியர்ப்பறியாமை இசைதனாதாக ஈத்தோன்; எந்தை; வயல் பூத்ததும்பின்று,
சினையலைக்குந்து,வெங்குறும்பின்று.உமணொலிக்குந்து; அன்ன நன்னாட்டுப்
பொருநம் யாம்; பொரா அப் பொருநரேம், செலினும், நீடினும், யாண்டும் நிற்க
உணர்ந்தோன் தாள் வாழிய எனக் கூட்டி வினை முடிவு செய்க.

     விளக்கம்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனுடைய
கொடையை யெடுத்தோதி வாழ்த்தலுற்ற கோவூர்கிழார், கொடை வளத்தைக்
கொடை யெதிர்ந்தோர்பால் உளதாகிய பயனால் உரைக்கும் புலமைத்
துறையை மேற்கொண்டு, “வெய்துண்ட வியர்ப் பல்லது,