பக்கம் எண் :

412

     

கடவுளும் தன் ஏவல் செய்யுமாறு செய்யும் கற்பினையுடையர். “பெண்மை
சான்று பெருமடநிலைஇக், கற்பிறைகொண்டகமழுஞ் சுடர்நுதற் புரையோள்”
(பதிற். 70) என்று கபிலர் அவரைப் பாராட்டுகின்றார். இவர்க்குச் சேரமான்
“சிறுபுறமன நூறாயிரங் காணங் கொடுத்து, நன்றாவென்னுங் குன்றேறி நின்று
தன் கண்ணிற்  கண்ட  நாடெல்லாம்  காட்டிக்   கொடுத்தான்”   என்று
ஏழாம்பத்தின்பதிகம் கூறுகிறது. இவ்வண்ணம் கபிரைச் சிறப்பித்த செல்வக்
கடுங்கோ  இப்  புறப்பாட்டைப்  பாடிய  குன்றுகட்  பாலியாதன் என்னும்
சான்றோரையும்  ஆதரித்துள்ளான்.  இச்  சான்றோரது இயற்பெயர் ஆதன்
என்றும்,  ஊர்  குன்றுகட்  பாலியென்றும் அறிக. குன்றின்கட் பாலியாதனார்
என்பது  இவரது  பெயர்;  இது நாளடைவில் குன்றுகட்ட பாலியாதனாரெனச்
சுருங்கிப்  பின்  குண்டுகட்  பாலிக்குன்னு  என்ற  பெயருடன் மலையாளம்
சில்லாயைச் சேர்ந்த கோழிக்கோட்டுப் பகுதியில் ( calicut) உளது. ஆதனார்
சேரநாட்டுப் புலவர் பெருமக்களுள் ஒருவராவர். செல்வக் கோவுக்குரிய நன்றா
என்னும்  குன்று  இடைக்காலத்தே நணா எனத்திரிந்துவிட்டது. அக் குன்றேறி
நின்று   கபிலர்க்குக்   காட்டிக்   கொடுத்த   நாட்டுப்   பகுதியில்  கபிலக்
குறிக்சியென்னும் ஊர் இருந்து அந்தப் பண்டைக்கால நிகழ்ச்சிக்குச் சான்று கூறி
நிற்கிறது.  இதன்  விளக்கத்தை  இவ்வுரைகாரருடைய  பண்டைநாளைச் சேரர்
என்ற நூலிற் காண்க. இனி, இவ்வாதனார் சேரமான் செல்வக் கடுங்கோ
வாழியாதனைக் காண்ச்சென்று அவன் பகைவரை வென்று அவர் தந்த திறையை
ஏற்று இனிதிருந்து தன் நண்பார்க்ம் பரிசிலர்க்கும் அவற்றை நல்குதலைக்
கண்டார். தாமும் அவன் வென்றிமாண்பை எடுத்துரைத்துப் பாடினார். கபிலர்
போலப் பெரும்புலவ ரல்லராயினும், இவ் வாதனாரைச் சேரமான் இழித்து
நோக்காது தன் பெருமைக் கேற்பத் தகவுற நோக்கிக்களிறும் மாவும் நிரையும்
பிறவும் கனவென அவர் மருளுமாறு வழங்கினான். “சேரமானைக் காணச்
செல்லுமிடத்து வழியிடையே வேறு சில வேந்தர் எதிர்ப்படின், அவர்க்கு யாம்
செல்வக் கடுங்கோ வாழியாதனால் புரக்கப் படும் இரவலர் என்னின், அவர்கள்
தம் குடையைப் பணித்து அன்புடன் வழிவிடுவர்” என்று இதன்கண் அவனது
ஒளியினையுயர்த்திக்   கூறி,   அவன் பொருநையாற்று மணலினும் அதனைச்
சுற்றியுள்ள வயல்களில் விளையும் நெல்லினும் பல்யாண்டு வாழ்வானாக என்று
வாழ்த்தியுள்ளார்.

 வள்ளுகிர வயலாமை
வெள்ளகடு கண்டன்ன
வீங்குவிசிப் மாக்கிணை யியக்கி யென்றும்
5மாறுகொண்டோடர மதிலிடறி
 நீறாடிய நறுங்கவுள்
பூம்பொறிப் பணையெருத்தின
வேந்துடைமிளை யயல்பரக்கும்
10ஏந்துகொட்டிரும்பிணர்த் தடக்கைத்