| படிந்த நறிய கபோலத்தையுடைய; பூம்பொறிப் பணையெருத்தின் - பூவேலை செய்யப்பட்ட பட்டமணிந்த பருத்த கழுத்தை யுடையவாய்; வேறுவேறு பரந்தியங்கி - வேறுவேறாகப் பரந்து சென்று; வேந்துடை மிளை அயல் பரக்கும் - வேந்தர்களுடைய காவற்காட்டின் அயவிடத்தே பரவியுலவும்; ஏந்துகோட்டு இரும்பிணர்த்தடக்கை - உயர்ந்த கோடுகளையும் பெரிய சருக்சரை பொருந்திய பெரிய கையையுமுடையவாய்; திருந்துதொழில் பல பகடு - திருந்திய தொழில் செய்யவல்ல பலவாகிய யானைகளையுடைய; பகைப்புல மன்னர் பணிதிறை தந்து - பகைநாட்டு வேந்தர் பணிந்து தரற்குரிய திறையைத் தந்து; நின் நகைப்புலவாணர் நல்குர வகற்றி - நினக்கு இன்பச்சுவை நல்கும் அறிவினராகிய இரவலர் நண்பர் முதலியோரது வறுமையைப் போக்கி; மிகப் பொலியார் தன் சேவடி - மிகவும் விளங்குக அவன் திருவடி; என்று-; யா அன் இசைப்பின் நனி நன்று எனா - யான் பாடுவேனாயின் மிகவும் நன்றென்று; பல பிற வாழ்த்த இருந்தோர்- பலவாகிய பிற இயல்புகளைக் சொல்லி வாழ்த்தக் கேட்டு மகிழ்ந்திருந்தோர்க்கு; கோன் - தலைமை தாங்கும் வேந்தன், மருவ இன்நகர் அகன் கடைத்தலை - நெருங்குதற்கினிய பெருமனையின் அகன்ற முற்றத்திடத்து; திருந்துகழற் சேவடி குறுகல் வேண்டி - திருந்திய கழலணிந்த சேவடியை வந்தடையுமாறு; வென்றிரங்கும் விறல் முரசினோன்- போர்க்களத்தில் பகைவரை வென்று முழக்கும் விறல்படைத்த முரசினையுடையவன்; என் சிறுமையின் இழித்து நோக்கான் - என் சிறுமை கண்டும் இகழ்ந்து நோக்காது; தன் பெருமையின் தகவு நோக்கி - தன் பெருமையும் தகதியும் நோக்கி; குன்றுறழ்ந்த களிறு - மலைபோன்ற களிறுகளும்; கொய்யுளையமா - கொய்யப் பட்ட தலையாட்டமணிந்த குதிரைகளும்; மன்று நிறையும் நிரை - மன்றிடம் நிறைந்த ஆனிரைகளும்; மனனக்களமரொடு களம் - மனைக்கண் இருந்து பணிபுரியும் களமரும் நெற்போர்க்களங்களுமாகிய; அவை - அவற்றை; வல்லே - விரைவாக; கனவென மருள நனவின் நல்கியோன் - கனவென்று மயங்குமாறு நனவின்கண் நல்கினான்; நசைசால் தோன்றல் - அன்பு நிறைந்த தலைவன்; பூழியர் பெருமகன் பூழிநாட்டார்க்குப் பெருந்தலைவனாயவன்; பிணர் மருப்பு யானை சருக்சரை - பொருந்திய கையும் கோடுமுடைய யானைகள் செய்யும்; செருமிகு நோன்றாள் - போரில் மேம்பட்ட வலிய தாளையுடைய; செல்வக் கடுங்கோ வாழியாதன்; என்னா - என்று; தன் பெயர் கூறிய அளவில்; தெவ்வர் உயர்குடை பணித்து - பகைவர் தம்முடைய உயர்ந்த கொற்றக் குடையைத் தாழ்த்தி வணங்கி; நெடிது நில்லாது இவண் |