பக்கம் எண் :

444

     
 ஆங்கப், பலநல்ல புலனணியும்
சீர்சான்ற விழுச்சிறப்பிற்
சிறுகண் யானைப் பெறலருந் தித்தன
செல்லா நல்லிசை யுறந்தைக் குணாது
 20.நெடுங்கை வேண்மா னருங்கடிப் பிடவூர்
 அறப்பெயர்ச் சாத்தன் கிணையேம் பெருமவெண
முன்னா ணன்பகற் சுரனுழந்து வருந்திக்
கதிர்நனி சென்ற கனையிருண் மாலைத்
தன்கடைத் தோன்றி யென்னுற விசைத்தலிற்
 25.றீங்குரல...கினரிக்குரற் றடாரியோ
 டாங்குநின்று வெற்கண்டு
சிறிது நில்லான் பெரிதுங் கூறான்
அருங்கலம் வரவே யருளினன் வேண்டி
ஐயென வுரைத்தன்றி நல்கித் தன்மனைப்
 30.பொன்போன் மடந்தையைக் காட்டி யிவனை
 என்போற் போற்றென் றோனே யதற்கொண்
டவன்மறவ லேனே பிறருள்ள லேனே
அகன்ஞாலம் பெரிது வெம்பினும்
மிகவானு ளெரிதோன்றினும்
 35.குளமீனொடுந் தாட்புகையினும்
 பெருஞ்செய் நெல்லின் கொக்குகிர் நிமிரல்
பசுங்கட் கருனைச் சூட்டொடு மாந்தி
விளை வொன்றொ வெள்ளங்கொள்கென
உள்ளது மில்லது மறியா
 40. தாங்கமைந் தன்றால் வாழ்கவன் றாளே.
      

     திணையுந் துறையு மவை. சோழநாட்டுப் பிடிவூர்கிழான் மகன் பெருஞ்
சாத்தனை மதுரை நக்கீர் பாடியது.


     உரை: மென்புலத்து வயலுழவர் - மென்புலமாகிய மருத நிலத்து
வயல்களில் தொழில் புரியும் உழாவர்; வன்புலத்துப் பகடுவிட்டு - வன்
புலமாகிய முல்லை நிலத்தில் தம் எருதுகளை மேயவிட்டு; குறுமுயலின்
குழைச்சூட்டொடு -  குறுமுயல்களின்  குழைந்த  சூட்டிறைச்சியுடனே;
நெடுவாளைப் பல் உவியல் - நெடிய வாளை மீனைக்கொண்டு பலவாகச்
செய்த   அவியலை;   பழஞ்சோற்றுப்   புகவருந்தி  -  பழையதாகிய
சோற்றுணவோடே யுண்டு; புதல் தளவின் பூச்சூடி-புதலிடத்தே மலர்ந்த
தளவ முல்லையின் பூவைத் தலையிற் சூடிக்கொண்டு; அரிப்பறையாற்
புள்ளோப்பி - அரித்த ஓசையையுடைய கிணைப்பறையைக் கொட்டி
வயலில் விளைந்த கதிர்களை யுண்டற்கு வந்துபடியும் புள்ளினங்களை
யோட்டி; அவிழ் நெல்லின் அரியல் ஆருந்து - நற்சோற்றினின்றும்
இறக்கப்பட்ட