| லாகியக் கண்ணும் -உயிர் நீத்தலின்நிலைபெற நடப்பட்ட கல்லான விடத்தும்; இடம் கொடுத்தளிப்ப மன்ற - இடங்கொடுத்தளிப்பர் நிச்சயமாக; உடம்போடு இன்னுயிர்விரும்பும் கிழமை உடம்போடு இனிய உயிர் விரும்பு மாறுபோல விரும்பும் உரிமையையுடைய; தொன்னட்புடையார் தம்முழைச் செலின் - பழைதாகிய நட்பையுடையோர் தம்மிடத்தே செல்லின்; எ - று.
மீக்கூறி யென்பது மீக்கூற வெனத் திரிக்கப்பட்டது; ஆணைகூறி யென்றுமாம். தொன்னட்புடையோர் தம்முழைச்செலின் இடங் கொடுத்தளிப்ப வெனக் கூட்டி வினைமுடிவு செய்க.
அவன் நட்பினை வியந்து கூறியது.
விளக்கம்: மீக்கூறி யென்பது செய்தெனெச்சமாய் இயைபுறாமை யான், மீக்கூற வெனத் திரிக்கப்பட்ட தென்றார். உலகாளுந் தன்மையை முடிவுபோகச் செலுத்தமாட்டாமைக்கு இடையில் தோன்றும் மறுமை யுணர்வு ஏதுவா மென்றற்கு அதனை வருவித்தார். ஆகவே, கோப்பெருஞ் சோழன், துறவுமேற்கோடற்கேற்ற செவ்வி யெய்து முன்பே அதனை மேற்கொண்டான் என்பதாம். தனது ஒளி, பரந்த உலகெங்கும் விளங்க இருந்த வேந்தன் உள்ளாற்றுக் கவலைப்புள்ளி நீழற்கண் ஒடுங்கியிருந்தமைபற்றி, சிறுவழி மடங்கி யென்றார். உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட சான்றோரது புகழ் உலகில் என்றும் நிலை பெறும்பொருட்டே அவர் பெயரும் பீடு மெழுதிய கற்கள் பண்டை நாளில் நடப்பட்டன என்பது இனிது விளங்க, நிலைபெறு நடுகல் என்றார். தமிழ் நாட்டில் இவ்வழக்கம் இரண்டு மூன்று நூற்றாண்டு கட்குமுன் வரையில் இருந்துள தென்பதைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. சிறந்த நட்புக்கு உடம்பும் உயிரும் இயைந்துநிற்கும் இயைபு உவமமாதல் இயல்பு. யாக்கைக் குயிரியைந் தன்ன நட்பு (அகம். 339) என்றும், உடம்போடுயிரிடை யென்ன மற்றன்ன மடந்தையொடெம்மிடை நட்பு (குறள். 1122) என்றும் வருதல் காண்க. இடங்கொடுத்தளிப்பமன்ற, என்றது, செத்துங் கொடுத்தான் சீதக்காதி என்ற பிற்கால வழக்கை நினைவுகூர்விப்பது காண்க. ---
224. சோழன் கரிகாற்பெருவளத்தான்
சோழவேந்தருள் கரிகாற் பெருவளத்தான் மிக்க சிறப்புடையவன். அவன் காலத்தே உறையூரும் காவிரிப்பூம் பட்டினமும் சோழநாட்டின் அரசியல் சிறப்புடைய நகரங்களாக விளங்கின. சோழ நாட்டின் புகழ் அக்காலத்தே மிக உயர்ந்த நிலையை யெய்தியிருந்தது. இடைக்காலத் தெலுங்கச் சோழர்களும் தங்கள் குடிவரவு கூறுமிடத்துத் தங்களைக் கரிகாலன்வழி வந்தோர் என்றே கூறிக்கொள்கின்றனர். கரிகாலன் வாழ்க்கையைப்பற்றிய குறிப்புக்கள் பல பண்டைத் தமிழ் நூல்களிற் காணப்படுகின்றன. போர் பலவுடற்றிய பேராண்மையும், இரப்பார்க் கீத்துப் பெற்ற இறவாப் புகழும், வேதியர்கள் விருப்பத்திற் கியைந்து வேள்விபல முடித்த வீறுடைமையும், பிறவும் கரிகாலனுடைய புகழ்க் கூறுகள் பலவற்றுட் சிறப்புடையவாகும். இவன் நெடுங்காலம் அரசு புரிந்து உயிர் நீத்தகாலை இவன் பிரிவாற்றாது வருந்திய சான்றோர்களுள் கருங்களவாதனார் ஒருவர். அவர் கரிகாலன் பெரும்பிறிதுற்றது கண்டு ஆற்றாது கையற்றுப் பாடிய பாட்டு இப்பாட்டு. இப் பாட்டின் கண் அவர் கரிகாலன் புகழ்க்கூறுகள் |