சிலவற்றை யெடுத்தோதி, இத்தகைய அறிவுடைய வேந்தனை இழந்த உலகம் இரங்கத்தக்கது. பெருவறங் கூர்ந்த காலத்தில் இடையர்கள், தம் நிரைகட்கு இரையாதல் வேண்டிப் பூத்துத் தழைத்துச் செறிந்திருந்த வேங்கை மரத்தைக் கூரிய வாள்கொண்டு கழித்தவழி, அம்மரம் பொலி விழந்து நிற்பது போலக் கரிகாலன் இறந்தபின் அவனுடைய உரிமை மகளிர் தம் இழைகளைக் களைந்து பொலிவிழந்து வருந்தா நின்றனர் என இரங்கிக் கூறுவது மிக்க உருக்கமாக இருப்பது நினைவுகூரத்தக்கது.
| அருப்பம் பேணா தமர்கடந் ததூஉம் துணைபுண ராயமொடு தசும்புடன் றொலைச்சி இரும்பா ணொக்கற் கடும்பு புரந்ததூஉம் அறமறக் கண்ட நெறிமா ணவையத்து | 5 | முறைநற் கறியுநர் முன்னுறப் புகழ்ந்த | | தூவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு பருதி யுருவிற் பல்படைப் புரிசை எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண் வேத வேள்வித் தொழின்முடித் ததூஉம் | 10 | அறிந்தோன் மன்ற வறிவுடை யாளன் | | இறந்தோன் றானே யளித்திவ் வுலகம் அருவி மாறி யஞ்சுவரக் கடுகிப் பெருவறங் கூர்ந்த வேனிற் காலைப் பசித்த வாயத்துப் பயனிரை தருமார் | 15 | பூவாட் கோவலர் பூவுட னுதிரக் | | கொய்துகட் டழித்த வேங்கையின் மெல்லியன் மகளிரு மிழைகளைந் தனரே. |
திணையும் துறையு மவை. சோழன் கரிகாற்பெருவளத்தானைக் கருங்குளவாதனார் பாடியது.
உரை: அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம் - அரிய அரண்களைப் பாதுகாவாது போரைச் செய்தழித்ததுவும்; துணை புணராயமொடு - துணையாய்க் கூடிய இனத்துடனேயுங் கூட; தசும்புடன் தொலைச்சி - மதுக்குடங்களைச் சேர நுகர்ந்து தொலைத்து; இரும்பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம் - பெரிய பாண் சுற்றமாகிய சுற்றத்தைப் பாதுகாத்ததுவும்; அறம் அறக்கண்ட நெறிமாண் அவையத்து - அறத்தைத் தெளி வுணர்ந்த ஒழுக்கம் மாட்சிமைப்பட்ட அந்தணரது அவைக்களத்தின்கண்; முறை நற்கு அறியுநர் முன்னுற - வேள்விக்குரிய முறைமையை நன்றாக அறியும் சடங்கவிகள் அம் முறைமையை முன்னின்று காட்ட; புகழ்ந்த - பலரானும் புகழப்பட்ட; தூ இயல் கொள்கைத் துகளறு |