பக்கம் எண் :

7

     

     புலிகடிமா  அல், அண்ணல், நாடுகிழவோய், அரையத்துக்
கேடுங்கேள்  இனி;  அது கழாத்தலையை    இகழ்ந்ததன்பயன்;
இப்பொழுது, எவ்விதொல் குடிப்படீஇயர்,  இவர்பாரிமகளிர்என்ற
புன்சொல்லைப் பொறுப்பாயாக; பெருமானே, நின்னை விடுத்தேன்; நின்
வேல்வெல்வதாகவெனக் கூட்டி வினை முடிவுசெய்க. ஒலியல் கண்ணி,
தளிர்மாலை யெனினுமமையும்.   நீடுநிலைஅரையத்துக்  கேடும்
கழாத்தலையைஇகழ்ந்ததன்பயன்என்றஉம்மையான், இவ்விகழ்ச்சியும்
நினக்குக்கேடுதரும் என்பதாயிற்று. அது கெடுதற்குக் காரணம், கழாத்
தலையை நுமருள் ஒருவன் இகழ்ந்ததனால், அவன் வாக்குத் தப்பாதாகலின்
அவன் வசையாகப் பாடினானென்று சொல்லுவர், அதுவே என்பதாம்.

    வெலீஇயர் நின் வேல் என்றது குறிப்புமொழி. நுந்தை தாயம் நிறைவுற
வெய்தியஎன்பதூஉம்,  நும்போலறிவின்என்பதூஉம்இகழ்ச்சி தோன்ற
நின்றன. வேங்கைவீ தாய துறுகல் இரும்புலி வரிப்புறம் கடுக்கும் என்ற
கருத்து, ஏதம் செய்யாததும் ஏதம் செய்வதுபோலக் கண்டார்க்கு அச்சம்
வரத் தோன்றுமென்றமையான் இதுவும் இகழ்ச்சி தோன்ற நின்றது.

    விளக்கம்: கட்சி - புகலிடம். இக்காலத்தே ஒரு சில கருத்துடன்
பாட்டால்ஒற்றுமைப்பட்டுநிற்கும்மக்கள் குழுவைக் கட்சியென்பர்.
இருங்கோவேளுக்குரிய அரையம் பண்டை நாளிலே அழிந்தமையின்
இப்போது அஃதுஇருக்குமிடம் தெரிந்திலது. இருங்கோவேள் மரபினர்
இப்போது பாண்டி   நாட்டில்   கொள்கையைச் சூழ்ந்த வூர்களில்
வாழ்கின்றனர். கழாத்தலை யென்னும் புலவர் கழாத்தலையார் எனப்படுவர்.
கழாத்தலை என்பது, சீத்தலை, பெருந்தலை முதலிய வூர்களைப் போல்வ
தோரூர்.அவ்வூரினராதலின்,  கழாத்தலையார்எனப்பட்டமையின்,
ஈண்டுவாளாதுகழாத்தலையென்றார். அவர் பாடிய பாட்டொன்று
இத்தொகை நூற்கண் உளது. (புறம். 270) முகையற மலர்ந்த வேங்கை
யென்றது, வேங்கை மரத்தில் இனிப் பூத்தற்கு அரும்பு ஒன்றும் இல்லை
யென்னுமாறு முற்றவும் மலர்ந்து நிற்கும் வேங்கை மரம் என்றவாறு. பிறரும்
“அரும்பற வள்ளிதழிவிழ்ந்த தாமரை, நள்ளிரும் பொய்கை” (புறம். 247)
என்றுகூறுவது  காண்க.  வேங்கைப்பூப்பரந்ததுறுகல்இரும்புலிபோல்
தோன்றுமென்றது,  “யான்இவர் எவ்வி குடியிற் பிறந்த செவ்வியர்,
கைவண் பாரிமகளிர்”   என்றதுநினக்குப்பகை தோற்றுவிப்பது
போன்றதோர் அச்சத்தைப் பயப்பித்தது போலும் என இகழ்ந்த குறிப்பும்
உடையதாதல் அறிக. “வெலீஇயர் நின் வேல்” என்றது நின்வேர் கெடுக
என்ற எதிர்மறைப் பொருள் பயந்து நிற்றலின் குறிப்பு மொழியென்றார்,
“எழுத்தொடும் சொல்லொடும் புணராதாகிப், பொருட்புறத்ததுவே குறிப்பு
மொழியென்ப” (செய். 177) என்று ஆசிரியர் கூறுவது காண்க. நுந்தை
தாயும் நிறைவுற எய்திய என்றது, நீயே நின் ஆற்றலாற் கொண்டிலை
எனவும், “நும்போ லறிவி னுமரு ளொருவ” னென்றது, நின்னைப்போலவே
நல்லறிவில்லாத நின் முன்னோருள் ஒருவன் எனவும் பொருள் இசைத்து
நிற்றலின், “இகழ்ச்சி தோன்ற நின்றன” என்று உரைத்தார்.