பக்கம் எண் :

86

     
 செற்றோரை வழிதபுத்தனன்
5நட்டோரை யுயர்புகூறினன்
 வலியரென வழிமொழியலன்
மெலியரென மீக்கூறலன்
பிறரைத்தா னிரப்பறியலன்
இரந்தோர்க்கு மறுப்பறியலன்
10வேந்துடை யவையத் தோங்குபுகழ் தோற்றினன்
 வருபடை யெதிர் தாங்கினன்
பெயர்படை புறங்கண்டனன்
கடும்பரிய மாக்கடவினன்
நெடுங்தெருவிற் றேர்வழங்கினன்
15ஓங்கியல களிறூர்ந்தனன்
 தீஞ்செறி தசும்புதொலைச்சினன்.
பாணுவப்பப் பசிதீர்த்தனன்
மயக்குடைய மொழிவிடுத்தனன், ஆங்குச்
செய்ப வெல்லாஞ் செய்தன னாகலின்
20இடுக வொன்றோ சுடுக வொன்றோ
 படுவழிப் படுகவிப் புகழ்வெய்யோன் றலையே.

   திணையும் துறையு மவை. நம்பிநெடுஞ்செழியனைப் பேரெயில்
முறுவலார் பாடியது.

    உரை: தொடியுடைய தோள் மணந்தனன் - இளைய மகளிரது
வளையணிந்த தோளை முயங்கினான்; கடிகாவில் பூச்சூடினன் -
காவலையுடைய இளமரக்காக்களில் பூவைச் சூடினான்; தண் கமழும் சாந்து
நீவினன் - குளிர்ந்த மணம் நாறும் சாந்தைப் பூசினான்; செற்றோரை வழி
தபுத்தனன் - பகைத்தோரைக் கிளையொடுங் கெடுத்தான்; நட்டோரை
உயர்பு கூறினன் - நட்டோரை மிகுத்துக் கூறினான்; வலியரெனவழி
மொழியலன் - இவர் நம்மில் வலியரென்று கருதி அவர்க்கு வழிபாடு
கூறியறியான்; மெலியரென மீக் கூறலன் - இவர் நம்மில் எளியரென்று கருதி
அவரின் மிகுத்துச் சொல்லியறியான்; பிறரைத் தான் இரப்பறியலன்- பிறரைத்
தான் ஒன்று ஈயெனச் சொல்லி இரந்தறியான்; இரந்தோரக்கு மறுப்பறியலன்
- சூழ்ந்துநின்று இரந்தோர்க்கு யாதும் இல்லையென்று மறுத்தலை யறியான்;
வேந்துடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன் - அரசருடைய
அவைக்களத்தின்கண் தனது உயர்ந்த புகழை வெளிப் படுத்தினான்;
வருபடை எதிர் தாங்கினன் - தன்மேல் வரும்படையைத் தன்னெல்லையுட்
புகுதாமல் எதிர்நின்று தடுத்தான்; பெயர் படை புறங்கண்டனன் -
புறக்கொடுத்துப் பெயரப்பட்ட படையினது புறக்கொடை