பக்கம் எண் :

87

     

கண்டு அதன்பின் செல்லாது நின்றான்; கடும்பரிய மாக்கடவினன் -
விரைந்த செலவையுடைய குதிரையைத் தன் மனத்தினும் விரையச்
செலுத்தினான்; நெடுந்தெருவில் தேர் வழங்கினன் - நெடிய வீதியின்கண்
தேரைச் சூழ இயக்கினான்; ஓங்கு இயல களிறு ஊர்ந்தனன் - உயர்ந்த
இயல்புடையவாகிய களிற்றைச் செலுத்தினான்; தீஞ் செறி தசும்பு
தொலைச்சினன் - இனிய செறிவை யுடைத்தாகிய மதுவையுடைய
குடங்களைப் பலர்க்கும் வழங்கித் தொலைவித்தான்; பாண் உவப்பச் பசி
தீர்த்தனன் - பாணர் உவப்ப அவர் பசியை மாற்றினான்; மயக்குடைய
மொழி விடுத்தனன் - நடுவு நிலைமையின் மயங்குதலையுடைய சொற்களை
அந் நடுவு நிலைமையிற் பிழையாதபடி மயக்கந்தீரக் கூறினான்; ஆங்குச்
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின் - அப்படிச் செய்யத்
தகுவனவெல்லாம் செய்தானாகலான்; இப் புகழ் வெய்யோன் தலை - இப்
புகழை விரும்புவோனது தலையை; இடுக - வாளானறுத்துப் போகடினும்
போகடுக; சுடுக - அன்றிச் சுடினும் சுடுக; படுவழிப் படுக பட்டபடி படுக;
எ - று.


    “நட்டோரை உயர்பு கூறினன்” என்றது, தான் உயர்த்துக் கூறவே
யாவரும் உயர்த்துக் கூறுவரென்பதாம். “மயக்குடைய மொழி விடுத்தனன்”
என்பதற்கு உலகவொழுக்கத்தில் மயக்கமுடைய சொற்கள் தன்னிடைப்
புகுதாமல் விடுத்தானென்றும், பொருள் மயங்கிய சொற்களைத் தன்னிடத்துப்
புகுதாமல் விடுத்தானென்றும் உரைப்பினும் அமையும். ஒன்றே வென்பது
எண்ணிடைச் சொல்.

    விளக்கம்: பேரெயில் என்றோரூர் சோழநாட்டிலும் உளது. ஆயினும்,
முறுவலார் பாண்டித் தலைவனைப் பாடியிருப்பதாலும், பாண்டி நாட்டிலும்
இப் பெயருடையதோரூர் இருத்தலாலும் இவர் பாண்டி நாட்டினரென்பது
வலியுறுகிறது. நம்பிநெடுஞ்செழியன் பெயர். நெடுமொழியனென்றும்
காணப்படுகிறது. நம்பிநெடுமொழியன் என்பதே பாடமாயின்,
நெடுமொழியனூரென்றோரூர் தென்னார்க்காடுவட்டத்தில் உண்மையின்,
பேரெயின் முறுவலார் சோழநாட்டினரெனத் துணியலாம். தொடி,
மகளிர்க்குரிய சீரிய அணியாதலின், அதுவே இளமகளிரைக் குறிப்பதாயிற்று.
“சுடர்த்தொடீஇ கேளாய்” (கலி.51.) என வருதல் காண்க. அதனால்
தொடியுடையதோள் என்றதற்கு “இளைய மகளிரது வளையணிந்த தோள்”
என உரை கூறப்பட்டது. பழம்பகை ஒருகாலும் நட்பாகாமை குறித்து,
அதனை “வழிதபுத்தனன்” என்றார். வழிமொழிதலாவது, யாது கூறினும்
தலை குனிந்து உடன்பட்டொழுகுதல். “வேந்துடை அவையத் தோங்கு புகழ்
தோற்றினன்” எனவே, இந்நெடுஞ்செழியன் முடி வேந்தனல்ல னென்பது
தெள்ளிதாம். புறங்கண்ட வழி, அப் புறங்காட்டினாரை யெறிதல்
மறத்துறையாகாமையின், “புறக் கொடை கண்டு அதன்பின் செல்லாது
நின்றான்” எனவுரைத்தார். கடவுதல் விரையச் செலுத்துதலாதலால்,
கடவினன் என்றதற்கு “மனத்தினும் விரையச் செலுத்தினான்”
என்றார்.