பக்கம் எண் :

90

     

பிறர் நாடுபடு செலவினராயினர்   இனி - பிறருடைய   நாட்டின்கண்
தலைப்படும்   போக்யைுடையராயினார்   இப்பொழுது, இஃதொரு
நிலையிருந்தவாறென்னை; எ - று.


    “மேலோருலகம் எய்தினன் எனவே” எனவும், “ஒள்ளெரி
நைப்பவுடம்பு மாய்ந்தனனென” எனவும் பாடமோதுவாருமுளர்.

    விளக்கம்: ஆஅய் அண்டிரன் இறந்தபின் அவனுடைய வழியினர்
இடைக் காலப் பாண்டியர் காலத்திலும் இருந்தனர்; இதனை வேள்விக் குடிச்
செப்பேடுகள், சீமாறவன்மன், அரிகேசரி பாண்டியன் மகனான
கோச்சடையன் இரணதீரனென்பவன் “கொற்றவேல் வலனேந்திப்,
பொருதூருங் கடற்றானையை மருதூருள் மாண்பழித்து, ஆய்வேளையகப்
படவே யென்னாமை யெறிந்தழித்து” மண்ணினிதாண்டான் என்று கூறுவது
காண்க. ஆடு நடை - அசைந்த நடை; விரைந்து செல்லும் இயல்பினதாகிய
குதிரையை இவ்வாறு கூறுதற்குக் காரணம் காட்டுவாராய்த் “தாளத்திற்
கேற்ப நடக்கும் அசைந்த நடை” யென்றார். அருகுதல், குறைதல்; அருகாது
கொடுப்பன் எனவே, “குறைவறக் கொடுக்கும்” என்றார். தன் செயலாற்
புலவர்க்குளதாகும் துன்பத்தைக் கண்டு வைத்தும் கண்ணோட்டஞ் செய்து
ஆய் அண்டிரன் உயிரைக் கொண்டு போகும் கருத்தைக் கைவிடாமையின்,
“காலனென்னுங் கண்ணிலி” யென்றார். செத்தோரை யழைத்தலாவது,
புறங்காட்டிலிருந்து பேராந்தை அலறுகுரல் செய்தல்; அதுசெத்தவர்களை
விரையத் தன்பால் வருமாறு அழைப்பது போலிருத்தலின். “சுட்டுக்
குவியெனச் செத்தோர்ப் பயிரும்” என்று உரைத்தார். ஓர்த்தது இசைக்கும்
பறை யென்றதற்கேற்ப, ஆந்தையின் பறைக்குரல் இவ்வாறு ஓர்க்கப் பட்டது.


241. ஆய் அண்டிரன்

     ஆய் அண்டிரன் இறந்தபோது அவனை யடக்கம் செய்த
சான்றோரிடையே உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரும் இருந்தனர்.
அண்டிரனோடு பன்னாள் நெடிதிருந்து பயின்று பழகிய கேண்மையராதலின்,
மோசியாருக்கு அவனது பிரிவு பெருந்துயரத்தை விளைத்தது. அந் நிலையில்
அண்டிரன் உடம்பு ஈமவெரியில் எரிவதும், அவனுடைய உரிமை மகளிர்
உடன் வீழ்ந்து எரிவதும் கண்டார். தம்முடைய இரு கண்களையும்
ஆற்றாமையால் மூடிக்கொண்டார்; அவர் மனக்கண்ணில் ஆய் அண்டிரன்
அவன் உரிமை மகளிர் உடன் சூழ்வரத் தேவருவலகம் சென்று சேரும்
காட்சி புலனாயிற்று. இம்மையில் அற வாழ்வு வாழ்ந்து, மறுமையில்
நுகர்தற்குரிய இன்ப வாழ்வு வாழ்தல் வேண்டிவரும் ஆயைத் தேவருலக
வேந்தன் பெருவிருப்பத்தோடு வரவேற்கும் திறத்தை மனமே கண்ணாகக்
கண்டார்; தேவர்கோன் பெருங் கோயிலுள்ள வரவேற்பு முரசு முழங்குகிறது;
தேவர் கூட்டத்தில் பேராரவாரம் எழுகிறது; வானமெங்கும் பெருமுழக்கம்
எதிரொலிக்கின்றது. இதனை இப் பாட்டின்கட் குறிக்கின்றார் நம் ஏணிச்சேரி
முடமோசியார்.

 திண்டே ரிரவலர்க் கீத்த தண்டார்
அண்டிரன் வரூஉ மென்ன வொண்டொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுட்