| இனிநினைந் திரக்க மாகின்று திணிமணற் செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத் தண்கய மாடு மகளிரொடு கைபிணைந்து தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி | 5 | மறையென லறியா மாயமி லாயமொ | | டுயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து நீர்நணிப் படிகோ டேறிச் சீர்மிகக் கரையவர் மருளத் திரையகம் பிதிர நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து | 10 | குளித்துமணற் கொண்ட கல்லா விளமை | | அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோர் தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற் றிருமிடை மிடைந்த சிலசொற் பெருமூதாளரே மாகிய வெமக்கே. |
திணையும் துறையு மவை. அவனைத் தொடித்தலை விழுத்தண்டினர் பாடியது .
உரை: இனி நினைந்து இரக்கமாகின்றது - இப்பொழுது நினைந்து இரக்கமாகாநின்றது ; திணி மணல் செய்வுறு பாவைக்கு செறிந்த - மணலிடத்துச் செய்யப்பட்ட வண்டற் பாவைக்கு; கொய்பூத தைஇ - பறிக்கப்பட்ட பூவைப் பறித்துச் சூடி; தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து - குளிர்ந்த பொய்கையின்கண் விளையாடும் மகளிரோடு கைகோத்து; தழுவு வழித் தழீஇ - அவர் தழுவினவிடத்தே தழுவி; தூங்கு வழித் தூங்கி - அசைந்தவிடத்தே அசைந்து ; மறை எனல் அறியா மாயமில் ஆயமொடு - ஒளித்துச் செய்யும் அஃதறியாத வஞ்சனையில்லாத இளமைந்தருடனே கூட; உயர்சினை மருதம் - உயர்ந்த கோடுகளுடைய மருதினது; துறையுறத் தாழ்ந்து - துறையிலே வந்து உறத்தாழ்ந்து; நீர் நணிப் படி கோடு ஏறி - நீர்க்கு அண்ணிதாகப் படிந்த கொம்பிலே யேறி ; சீர் மிக - அழகு மிக; கரையவர் மருள - கரையிடத்து நிற்போர் வியப்ப; திரையகம் பிதிர - திரையிடத்துத் திவலையெழ; நெடு நீர்க் குட்ட த்துத் துடும் எனப்பாய்ந்து குளித்து - ஆழத்தான் நெடிய நீரையுடைய மடுவின்கண் துடுமென்றொலிப்பக் குறித்து மூழ்கி; மணல் கொண்ட கல்லா இளமை - மணலை முகந்து காட்டிய கல்வியில்லாத இளமை; அளிது - இரங்கத்தக்கது; யாண்டு உண்டு கொல்லோ - அவ்விளமை எவ்விடத் துண்டு கொல்லோ; தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி - பூண் செறிந்த |