| முசுக்கலையினீக்குதற்கு இரலையென விசேடித்தனர்...சாதலென்பது இன்னாதாகலின் பெரும் பிறிதாயின்றோ என்றான். தானுறுகின்ற துன்பத்தைக் கலைமேல் வைத்துக் கூறியவாறு.
விளக்கம்: தம்மைப் புரப்பவர் இனிய செவ்வியராகிய வழி பாணர் தம் தலையிற் பூக்களைச் சூடி யின்புறுவர். அப் பூவின் தேனாடி வண்டுகள் சென்று படிந்து ஊதும். விறலியரும் தம் முன்கையில் தொடியணிந்து விளங்குவர். பாணர் முதலியோரைப் பேணும். தலை மகன் துன்புற்றானாக, அதனால் கையறவுற்ற சான்றோர் ஒருவர், பாணர் சென்னியும் வண்டு சென்...றூதா விறலியர் முன்கையும் தொடியிற் பொலியா, இரவன் மாக்களும்... என்று பாடியுள்ளார். பரிசில் பெற்ற பாணர் புதுப் பூக்களைத் தலையிலணிந்து வாயில் விருந்தினுண்ட கள் மணங்கமழ வருங்கால் வண்டு மொய்த்தரற்றுமாகலின், அந்நிலையைப் பிறர், கண்டோர் மருளும் வண்டு சூழ்நிலை (பொருந. 97) என்பர்; அந்நிலை கழிந்தமை குறித்து நிற்றலின், பாணர் சென்னியும் வண்டு சென்று ஊதா என்றார். பாணர்க்குத் தாமரையும் விறலியர்க்குத் தொடி முதலிய இழையும் பரிசிலாகத் தரப்படும். கையறவு எய்துங் காலத்து மகளிர் தொடி கழித்து வருந்தும் நிலைமை விளங்க, விறலியர் முன்கையும் தொடியிற் பொலியா என்றார்; தொடிகழி மகளிரின் தொல் கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென்றனவே (புறம். 238) என்று பிறரும் கூறுதல் காண்க. இப்பாட்டின் சிதைந்த பகுதியில், கலையாகிய இரலையொன்று காட்டில் பெருந்துன்பமுறுதலைக் கண்டு அதன் துன்ப நிகழ்ச்சியைக் குறித்துப் பாடியுள்ளார். அப் பகுதி கிடைத்திலது. அதன்கண் கலையென்று வாளாகூறாது, கலையாகிய இரலையெனக் கூறியுள்ளார். அதற்கு விளக்கம் கூறலுற்ற உரைகாரர், முசுக்கலையினீக்குதற்கு இரலையென விசேடித்தார் என்று உரைத்துள்ளார். அப் பகுதியில் ஒருவன் கலைமான் உற்ற துன்பம் கண்டு கூறுபவன் அதன் காதற் பிணையாகிய மான் இறந்து போயிற்றுப் போலும் என ஐயுற்று, அவ்வாறு கூறாது பெரும் பிறிதாயின்றோ என்று இசைத்துள்ளான். அதுகுறித்து விளக்கம் கூறவந்த உரைகாரர், சாலென்பது...என்றான் என்று கூறுகின்றார். இப் பாட்டு முழுவடிவும் காண்டற்குரிய நற்பேறு நமக்கு இல்லை. ---
245. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை கோட்டம்பலமென்பது சேரநாட்டூர்களுள் ஒன்று. இக்கோட்டம் பலம், இப்போது அம்பலப்புழை யென்னும் இடமாகும்; கடற்கோட்டில் உள்ள அம்பலமாதலின், இது கோட்டம்பலம் எனப் பண்டை நாளில் பெயர் பெற்றுப் பிற்காலத்தே அம்பலப் புழையென மாறிற்றாதல் வேண்டும்; இன்றும் இது தொன்மைச் சிறப்புடைய ஊராகவே விளங்குவதும், இப்பகுதியில் மாக்கோதை மங்கலமென ஓர் ஊர் இருப்பதும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன. இது சில ஏடுகளில் கூத்தம்பலம் எனப் பாடம் வேறுபடுகிறது. சேரநாட்டில் பல கூத்தம்பலங்கள் உள்ளன. கூத்தம்பல மென்பதே பாடமாயின், இறைவன் கோயில்களிற் காணப்படும் இக் கூத்தம்பலங்களுள் ஒன்றிலிருந்து இம் மாக்கோதை துஞ்சினான் எனக் கோடல்வேண்டும். திருவாங்கூர் நாட்டு அரிப்பாடு முதலிய இடங்களில் கூத்தம்பலங்கள் இருந்திருக்கின்றன என அந்நாட்டுக் கல்வெட்டறிக்கைகள் (T.A.S. Vol. VI of 1927, p.35) கூறுகின்றன. சேரமான் மாக்கோதை தன் இறுதிநாளில |