|       | |   | அணில்வரிக்             கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட |  | 5 | காழ்போ             னல்விளர் நறுநெய் தீண்டா |  |   | தடையிடைக்             கிடந்த கைபிழி பிண்டம்             வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட             வேளை வெந்தை வல்சி யாகப்             பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும் |  |              10 | உயவற்             பெண்டிரே மல்லே மாதோ |  |   | பெருங்காட்டுப்             பண்ணிய கருங்கோட் டீமம்             நுமக்கரி தாகுக தில்ல வெமக்கெம்             பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற             வள்ளித ழவிழ்ந்த தாமரை              |  | 15 |             நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே. |  
      திணை:         அது. துறை: ஆனந்தப்பையுள். பூதபாண்டியன் தேவி          பெருங். கோப்பெண்டு தீப்பாய்வாள் சொல்லியது.
       ஆனந்தப் பையுளாவது: விழுமங்கூர வேய்த்தோ         ளரிவை, கொழு          நன் வீயக் குழைந்துயங் கின்று (பு.வெ.மா.சிறப். பொது. 13)
      உரை:         பல் சான்றீரே பல் சான்றீரே - பல சான்றவிரே பல          சான்றவிரே; செல்க எனச் சொல்லாது - நின் தலைவனோடு இறப்ப நீ போ          என்று கூறாது; ஒழிக என விலக்கும் - அதனைத் தவிர்க என்று சொல்லி          விலக்கும்; பொல்லாச் சூழ்ச்சி பல்சான்றீரே - பொல்லாத விசாரத்தையுடைய         பல சான்றவிரே; அணில் வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட காழ்போல்         - அணிலினது வரிபோலும் வரியையுடைய வளைந்த வெள்ளரிக்காயை          அரிவாளால் அரிந்திடப்பட்ட விதைபோன்ற; நல் விளர் நறுநெய் தீண்டாது-         நல்ல வெள்ளிய நறியநெய் தீண்டாமல்; அடையிடைக் கிடந்த கைபிழி          பிண்டம் - இலையிடையே பயின்ற கையாற் பிழிந்து கொள்ளப்பட்ட நீர்ச்          சோற்றுத் திரளுடனே; வெள்ளெள் சாந்தோடு - வெள்ளிய எள்ளரைத்த          விழுதுடனே; புளி பெய்து அட்ட வேளை வெந்தை - புளி கூட்டி          யடப்பட்ட வேளையிலை வெந்த வேவையுமாகிய இவை; வல்சியாக -          உணவாகக் கொண்டு; பரல் பெய் பள்ளி - பருக்கைகளாற் படுக்கப் பட்ட          படுக்கையின்கண்; பாய் இன்று வதியும் - பாயுமின்றிக் கிடக்கும்; உயவல்          பெண்டிரேம் அல்லேம் - கைம்மை நோன்பால் வருந்தும் பெண்டிருள்ளே          மல்லேம் யாம்; பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம் -          புறங்காட்டின்கண் உண்டாக்கப் பட்ட கரிய முருட்டால் அடுக்கப்பட்ட          பிணப்படுக்கை; நுமக்கு அரிதாகுக - உங்களுக்கு அரிதாவதாகுக; எமக்கு          எம் பெருந்தோள் கணவன் மாய்ந்தென- எமக்கு எம்முடைய பெரிய  |