இதுவுமது பெண்தகைப் பேதைக்குக் கண் - பெண்டன்மையுடைய இப்பேதைமையாளுக் குள்ள கண்கள்; கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் அமர்த்தன - தம்மைக் கண்டவரைக் கொல்லும் தோற்றத்துடன் கூடிக் கொடியனவா யிருந்தன. இனி அமர்த்தல் மாறுபடுதல் என்றுகொண்டு கண்கள் பெண்டன்மையொடும் பேதைன்மையொடும் பொருந்தாது மாறுபட்டிருந்தன எனினுமாம். 'கண்' பால்பகா அஃறிணைப்பெயர் பேதையென்னுஞ்சொல் இங்குப் பருவங்குறியாது இளமை குறித்து நின்றது.
|