(தலைமகனிடத்தினின்று தூதுவராமைபற்றித் தலைமகள் வருந்தியது.) வீழ்வாரின் இன்சொல் பெறாது வாழ்வாரின்-தம்மால் விரும்பப்படும் காதலரிடத்து நின்றும் ஓரின் சொல்லளவும் வரப்பெறாதே பிரிவாற்றி உயிர்வாழ்கின்ற மகளிர்போல:வன்கணாளர் உலகத்து இல்-வன்னெஞ்சர் இவ்வுலகத்தில் வேறொருவருமில்லை. தொலைவிலுள்ள காதலரிடத்தினின்று வருந் தூதெல்லாம் இக்காலத் தஞ்சல் போலப் பொதுவாக இன்பம் பயக்குமாதலின் ’இன்சொல்’ என்றும், பிரிவாற்றுதலோடு தூதின்மை யாற்றுதலுஞ் செய்தலால் ’வாழ்வாரின் வன்கணாரில்’ என்றுங் கூறினாள். ’பெறாஅ’ இசைநிறையளபெடை.. இழிவு சிறப்பும்மை தொக்கது.
|