பக்கம் எண் :

தஞ்சந் தமரல்ல ரேதிலார் தாமுடைய
நெஞ்சந் தமரல் வழி.

 

(இதுவுமது)

தாம்உடைய நெஞ்சம் தமர் அல்வழி-நம் உறுப்பாகவுள்ள உள்ளமே ஒருவர்க்கு உறவல்லாத விடத்து; ஏதிலார் தமர் அல்லர் தஞ்சம்-அயலார் உறவல்லாதவராக இருத்தல் மிக எளிதாகக் காணக்கூடிய செய்தியே யாகும்.

புறத்தி யொருத்தியைக் காதலியென்று கருதி என் உள்ளமே என்னை வருத்தும்போது, அப்புறத்தி புலக்கின்றதில் என்னை வியப்புள்ளது என்பதாம், ’தமர்’ ஆகுபொருளி. ’தஞ்சம்’ எளிமைப் பொருளிடைச் சொல். தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே ." (தொல். சொல். இடை. 18.)