உலகம் பழித்தது ஒழித்து விடின் - உயர்ந்தோர் தவத்திற்காகாதென்று தள்ளிய ஒழுக்கத்தை விட்டுவிடின்; மழித்தலும் நீட்டலும் வேண்டா - தலைமயிரை வறண்டலும் சடையாக்கலும் வேண்டியதில்லை. சமணர் கையாளும் பறித்தல் முறையும் மழித்தலுள் அடங்கும். மழித்தல் என்னும் வினையினால் தலைமயிர் என்னும் செயப்படுபொருள் உணரப்படும். "மனத்துக்கண் மாசில னாத லனைத்தறன் ஆகுல நீர பிற". என்றதற் கேற்ப , கூடா வொழுக்க மில்லார்க்கு எவ்வகைப் புறக்கோலமும் வேண்டியதில்லை யென்பது இக்குறளாற் கூறப்பட்டது. |