அறத்துப் பால் துறவறவியல் அதிகாரம் 32. இன்னா செய்யாமைஅஃதாவது பகைபற்றியாவது ஒரு பயனோக்கியாவது விளையாட்டாகவாவது கவனமின்மையாலாவது ஓருயிர்க்கும் ஒருதீங்கும் செய்யாமை. சினமில்லாத போதும் இன்னாசெய்தல் நிகழுமாயினும், பகைபற்றி நிகழ்வதே பெரும்பான்மை யாதலாலும், பகை வெகுளியின் நீட்சியாதலாலும், அதை விலக்குதற்கு இது வெகுளாமையின் பின் வைக்கப்பட்டது. இன்னுதல் இனித்தல் அல்லது இன்பமாதல், இன்- இன்பு- இன்பம். இன்- இனி. இன்னா இனிய என்பதன் எதிர்மறையான பலவின்பால் வினையாலனையும் பெயர். |