அறத்துப் பால் இல்லறவியல் அதிகாரம் 7. மக்கட்பேறுஅஃதாவது, இனப்பெருக்கத்திற்கும் உலக நடப்புத் தொடர்ச்சிக்கும் இறைவன் வகுத்த இயற்கையான ஏற்பாட்டின்படியும், தத்தம் தொழிலில் தமக்கு உதவி செய்தற்பொருட்டும், உழைக்க இயலாத முதுமைக்காலத்தில் தம்மைப் பேணும் பொருட்டும், தாம் இறந்தபின் தம் பெயரால் அறஞ்செய்தற் பொருட்டும், தம் பெயரை இவ்வுலகில் நிலவச்செய்தற் பொருட்டும், பிள்ளைகளைப் பெறுதல். |