பக்கம் எண் :

எண்ணிய வெண்ணியாங் கெய்துப வெண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.

 

எண்ணியார் திண்ணியார் ஆகப் பெறின்-பொருள்களைப் பெற எண்ணியவர் அவற்றைப் பெறுவதற்கு வழியாகிய வினையில் திண்மையுள்ளவராக இருப்பாராயின்; எண்ணிய எண்ணிய ஆங்கு எய்துப-தாம் பெற எண்ணிய பொருள்களையெல்லாம் தாம் எண்ணியவாறே பெறுவர்.

கருதிய பொருள்களை யெல்லாம் எளிதிற் பெறுவ ரென்பார் 'எண்ணிய எண்ணியாங் கெய்துப' என்றார். அமைச்சரின் சூழ்வினை போன்ற செய்வினையும் திண்ணியதாயிருப்பின், அவர் கருதிய பொருள் பெறுதல் எளிதென்பதாம். மந்திரம் மன்னும் திறம். மன்னுதல் எண்ணுதல். முன்(னு)-மன்(னு).