அறத்துப் பால் இல்லறவியல் அதிகாரம் 8. அன்புடைமைஅஃதாவது, இல்லறத்தானும் அவன் வாழ்க்கைத் துணையுமாகிய, கணவனும் மனைவியும் தாம் பெற்ற மக்களிடத்துக் காட்டிய அன்பை, துறவோர்ப் போற்றல், விருந்தோம்பல், ஒப்புரவொழுகல், இல்லார்க் கீதல், இரப்போர்க்கிடுதல் முதலிய இல்லறவினைகள் நடைபெறற்கேற்ப பிறரிடத்தும் உடையராயிருத்தல். பிள்ளைகளைப் பெற்றவர்க்கே பிறரிடத்து அன்புண்டாகும் என்பது பொதுவான உலகக் கொள்கை. |