கற்று அறிந்தும் நல்லார் அவை அஞ்சுவார் -நூல்களைக் கற்று அவற்றின் பயனை அறிந்திருந்தும், நல்ல அறிஞரவைக்கு அஞ்சி அங்கு அவற்றை எடுத்துக் கூற மாட்டாதார்; கல்லாதவரின் கடை என்ப - கல்லாதவரினுங் கடைப்பட்டவர் என்பர் அறிஞர். கற்றோர் தம் கல்வியைக் பிறர்க்கு எடுத்துச் சொல்வதனாற் பொருள்வகையாலும் புகழ்வகையாலும் தாமும் பயன்பெறுவராதலின், அதைச் சொல்லாமையால் தாமும் பயன்பெறாது பிறரையும் பயன்பெறுவிக்காது தம் கல்வி முயற்சியை வீணாக்குவதால், கல்லாத வரினுங் கடைப்பட்டவ ரென்று உலகம் பழிக்கும் என்றார். 'நல்லார்' என்பது நன்மை செய்வார் என்பதைக் குறிப்பாய் உணர்த்தி நின்றது.
|