உறின் நட்டு அறின் ஒருவும் - தமக்கொரு பயனுள்ள விடத்து நட்புச்செய்து அஃதில்லாத விடத்து நீங்கிவிடும்; ஒப்புஇலார் கேண்மை-உள்ளத்தாற் பொருந்தாதவரது நட்பை; பெறினும் இழப்பினும் என்-பெற்றாலும் பெற்றபின் இழந்தாலும் இரண்டிற்கும் என்ன வேறுபாடுண்டு ? ஒன்றுமில்லை. தந்நலமே கருதுபவர் உள்ளத்தாற் பொருந்தாராதலின் ஒப்பிலார் என்றும், அவர் நட்பு இருப்பின் ஆக்கமும் இல்லாவிடின் கேடும் இன்மையால் ' பெறினும் இழப்பினுமென் ' என்றும், கூறினார். ஒத்தல் உள்ளம் ஒன்றுதல். ' ஒரூஉம் ' இன்னிசையளபெடை.
|