பக்கம் எண் :

தேறினுந் தேறா விடினு மழிவின்கட்
டேறான் பகாஅன் விடல்.

 

அழிவின்கண்- இருபகைவருள் ஒருவனால் தோல்வி நேர்ந்த விடத்து; தேறினும் தேறாவிடினும் - இன்னொரு பகைவனைத் தெளிந்தானாயினும் ; தெளிந்திலனாயினும் , தேறான் பகான் விடல் -அவனொடு சேராமலும் அவனைவிட்டு நீங்காமலும் இடைநிலையில் நின்றுகொள்க.

முன்தெளிந்தானாயினும் அப்பொழுது கூடாதிருக்க என்றது உடனின்று கெடுக்காதிருத்தற் பொருட்டு. தெளிந்திலனாயினும் அப்பொழுது நீங்காதிருக்க என்றது, வெளிப்படைப் பகையால் மேலுந்தனக்குக் கேடு வராதிருத்தற் பொருட்டு. தேறான் பகான் எதிர்மறை முற்றெச்சங்கள். பகாஅன் இசைநிறையளபெடை. இக்குறளால் பகையை நொதுமலாக்கல் கூறப்பட்டது.