பொருட்பால் உறுப்பியல்-குடி அதிகாரம் 99. சான்றாண்மை.அஃதாவது, பல நற்குணங்களாலும் நிறைந்து அவற்றை யாளுந்தன்மை, சாலுதல் நிறைதல்; பல நற்குணங்களாலும் என்பது அவாய்நிலையால் வந்தது. ஆண்மை ஆளுதல், அவற்றை என்னும் செயப்படு பொருட் சுட்டுப் பெயரும் அவாய்நிலையால் வந்ததே, மானமும் பெருமையும் அல்லாத நற்குணங்கள் பலவற்றையும் தொகுத்துக்கொண்டு நிற்றலால், இது அவற்றின்பின் வைக்கப்பட்டது, சான்றாண்மை சால்பு எனவும் படும். |