ஆயவன்- (மேலே அரசியல் படலத்தில் கூறிய அப்பெருமையெல்லாம் பொருந்தியவனான) அந்தத் தயரத மன்னன்; ஒருபகல் அயனையே நிகர் தூயமாமுனிவனைத் தொழுது-ஒரு நாள் பிரமனுக்கு ஒப்பாகத் திகழும் தூய்மை பொருந்திய மாமுனிவனாகிய வசிட்ட முனிவனை வணங்கி; தொல்குலத்தாயரும். தந்தையும். தவமும்- பழமை பொருந்திய எமது குலத்தாய்மாரும் தந்தைமாரும் தவப்பயன்களும்; அன்பினால் மேயவான் கடவுளும்-அன்பு கொண்டு நான் விரும்பும் கடவுளும்; பிறவும் வேறு நீ- மற்றையோரும். வேறுபட்ட உயிர்களும் அனைத்தும் எனக்குத் தாங்களேதாம். தவம்: புண்ணியமும்ஆம். வான்: உண்மை என்றும் பொருள் கூறலாம். ‘பிறவும் வேறும்’ என்பது இங்குக் கூறப்படாத மற்றஎல்லாம் என்ற பொருள் தந்து நின்றது. வசிட்டரை மன்னன் எப்படி மதித்துள்ளான் என்பது இதனால் புலப்படும். இது குளகம் நான்காம் பாடலின் “என்றுளன்” எனவரும் சொல்லுடன் முடியும். 1 |