விசுவாமித்திரன் தனது வேள்வியைச் செய்து முடித்ததைக் கூறும் பகுதியாகும். தேவர்கள் கூறியபடி இராமனுக்கு விசுவாமித்திரன் படைக்கலம் தருவதும். அப்படைக் கலன்கள் இளையவனைப் போலப் பணிபுரிவோம் என முன்வருதலும் பிறகு மூவரும் வேள்வி செய்வதற்குரிய இடம் நாடிச் சேர்தலும் முனிவன் வேள்வியைத் தொடங்குவதும் அரக்கர் வருகையும் முனிவர்கள் ராமனைச் சரண் அடைய - அவர்களைக் கலங்க வேண்டா என்று கூறி இராமன் அரக்கரை அழித்தலும் சுபாகுவைக் கொன்று. மாரீசனைக் கடலில் சேர்த்தும். விசவாமித்திரன் இராமனைப் பாராட்டுதலும் சனகன் வேள்வியைக் காண மூவரும் மிதிலை நோக்கிச் செல்லத் தொடங்குதலும் வேள்விப் படலத்துள் கூறப்படும் நிகழ்ச்சிகளாகும். |