வான் நனைய - வானம் நனையவும்; மண் நனைய வளர்ந்து எழுந்த - மண்நனையவும் மிக எழுந்த; கொழுங் குருதி மகர வேலை தான் நனைவுற்று - செழுமையான இரத்தத்தில் மகர மீன்களுடைய கடலும் நனைய; எழும் பறவைச் சிறை தெளித்து - வானில் எழும் பறவைகளின் சிறகுகளில் தெளித்த; புது மழையின் துள்ளி தாங்கி - புதிய மழைத் துளிகளைத் தாங்கியிருப்பதால்; மீன் அனைய நறும் போதும் - விண்மீன் போன்ற வெள்ளிய நறுமலர்களும்; விரை அரும்பும் சிறைவண்டும்- மணமிக்க அரும்பும் கருஞ்சிறகு வண்டுகளும்; வேறு நிறம் எய்தி - வேற்று நிறம் பெற்று; கானகமும் கடிபொழிலும் முறிஈன்ற போன்று- காடும் மணமிக்க சோலையும் செந்தளிர்களைத் தளிர்த்தது போன்று; ஒளிர்வ காண்மின் காண்மின் - விளங்குவதைப் பாருங்கள்! பாருங்கள்! |
(22) |
9603. | 'வரை பொருத மத யானைத் துணை மருப்பும், |
| கிளர் முத்தும், மணியும், வாரி, |
| திரை பொருது புறம் குவிப்பத் திறம் கொள் பணை |
| மரம் உருட்டி, சிறைப் புள் ஆர்ப்ப, |
| நுரை கொடியும் வெண் குடையும் சாமரையும் |
| எனச் சுமந்து, பிணத்தின் நோன்மைக் |
| கரை பொருது கடல் மடுக்கும் கடுங் குருதிப் |
| பேர் ஆறு காண்மின்! காண்மின்! |
|
வரைபொருத மதயானைத் துணைமருப்பும்- மலையொடு போரிட்ட மதமிக்க யானையின் இரட்டைக் கொம்புகளையும்; கிளர் முத்தும் மணியும் வாரி - (அவற்றில் தோன்றிய ஒளிமிக்க முத்துக்களையும், மணிகளையும் வாரிக்கொண்டு; திரை பொருது புறம் குவிப்ப- அலைகள் மோதி இருபுறமும் குவிக்க; திறம் கொன் பணைமரம் உருட்டி - வலிமை மிக்க பருத்த மரங்களை உருட்டி; சிறைப்புள் ஆர்ப்ப - சிறகோடு கூடிய பறவைகள் ஆரவாரிக்க; கொடியும் வெண்குடையும் - கொடியும் வெண்குடையும்; சாமரையும் நுரை எனச் சுமந்து - சாமரையும் ஆகியவற்றை நுரை எனும் படி சுமந்து கொண்டு; பிணத்தின் நோன்மைக் கரை பொருது- பிணங்களாலாகிய வலிய கரைகளை மோதி; கடல் மடுக்கும் கருங் குருதிப் பேர்ஆறு - கடலில் கலக்கும் வேகமுள்ள இரத்தப் பேராற்றை; காண்மின் காண்மின் - பாருங்கள்! பாருங்கள்! |
(23) |