பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்161


தீண்டலாலும் அவர்களை வியப்பாக நோக்குதலாலும் அவர் கூற வனவாகிய இனிய சொற்களைக் கேட்டலாலும் கற்பு மிக்க தம் மனத்தாலும் ஆராய்ந்து காண்டற்கரிதாகவே தாம் தாம் விரும்பு மாற்றாலே விரும்பிய இன்பத்தை நுகர்ந்தினிது வாழ்வாராயினர்; என்க. (63)

ஆகச் செய்யுள் 367

உதயணகுமார காவியமும் உரையும்
முற்றும்

---------------

உதயணகுமாராவியம்

காண்டங்களின்& செய்யுட்டொகை

அறுசீர்க்ழிநெடிலடிாசிரிய& விருத்தம்

உஞ்சைநற் காண்டந் தன்னி

லுயர்கவி நூற்றீ ரெட்டு

மிஞ்சவே யிலாவா ணத்தின்

வீறுயர் முப்ப தாகும்

எஞ்சலின் மகத காண்ட

மெழிலுடை முப்பத் தஞ்சாம்

அஞ்சுட னைம்பத் தொன்றா

மரியவத் தவத்திலன்றே

நறுமலர் மாலை மார்ப னரவாக காண்டந் தன்னில்
அறுபது மொன்றுமாகு மாகிய துறவுக் காண்டம்
அறுபது மஞ்சு மாகு மன்புவைத் தோது வோர்க்குந்
திறவதிற் கேட்ப வர்க்குஞ் சிவகதி யாகு மன்றே

நூற்றீரெட்டு நூற்றுப்பதினாறு முதலில் உள்ள கடவுள் வாழ்த்து அவையடக்கம் பயன்கூறும் நான்கு செய்யுளையும் நீக்கி உஞ்சைக் காண்டச் செய்யுட் டொகை காண்க

உத