பக்கம் எண் :

160உதயணகுமார காவியம் [ துறவுக காண்டம்]


(இ - ள்.) இவ்வாறு உதயண முனிவனும் உயர்ந்த பெரிய மலையிலே தனது நெஞ்சம் இனிதாகும்படி அழகிய யோகத்திருந்து இன்புறுதற்குக் காரணமான தியானத்தினாலே இருள் சேர் இரு வினைகளையும் சுட்டெரித்துக் கேவல ஞானம் கைவறப் பெற்றுக் கடையிலாப் பேரின்பத்தே இனிதாக நிலைபெற்றிருப்பானாயினன் என்க. (63)

தேவிமாரும் அமைச்சரும் நோன்பு செய்து தேவராதல்

366. அமைச்சரா மநகரு

மானவன்ன மாதரும்

சமைத்த நோன்பு நோற்றுயர்ந்து

சமாதிநன் மரணத்தின்

இமைத்தலில் லமரரா

நிறைந்தசோத மாதியாய்

அமைத்தவச் சுதம்மள

வானபடி யின்புற்றார்.

(இ - ள்.) யூகி முதலிய அமைச்சர்களும் துறந்துவந்தவரான அக் கோப்பெருந்தேவிமாரும் நூல்களில் விதிக்கப்பட்ட நோன்புகளை மேற்கொண்டு நின்று உயர்ந்தவராய்ச் சமாதி கூடிய நல்ல தம் சாக்காட்டின் பின்னர் அவ்வவர் நோன்பின் தகுதிக்கேற்பச் சௌதரும கற்பயோகம் முதல் அச்சுத கற்பயோக மீறாகவுள்ள தேவலோகங்களிலே பிறப்பெய்தித் தத்தம் தகுதிக்கியன்ற இன்ப வாழ்வினை யெய்தினர் என்க. (64)

தேவிமாரும் அமைச்சரும் தேவலோகத்தின் புற்றிருத்தல்

367. பொற்புடைநன் மாதரைப்

புணர்ந்துமேனி தீண்டலும்

அற்புதமாய்க் காண்டலு

மானவின்சொற் கேட்டலும்

கற்புடைம னத்திலெண்ணிக்

காணற்கரி தாகவே

விற்பனநன் மாதவர்

வேண்டுசுகந் துய்த்தனர்.

(இ - ள்.) வித்தகமுடைய அமைச்சரும் தேவிமாருமாகிய அத்தவத்தினர் மேனிலை யுலகத்தே தேவர்களாய்த் தோன்றி அங்கு அழகிய தேவமாதர்களைப் புணர்ந்து அவர் தம் திருமேனியைத்