புரிய அப்பொழுது உதயணமன்னன் தனது
வாளினை அந்தச் சாலங்காயன் தலையிலே வைத்தான்
என்க. மன்+தன் வாள் எனக் கண்ணழித்துக் கொள்க.
(50)
உதயணன் சாலங்காயனைக் கொல்லாது விடுதல்
55. மந்திரீகளை மன்னர் வதைசெயார்
புந்தி மிக்கோ ருரைபொருட் டேறித்தன்
செந்தி வாளை யழுத்திலன் செல்வனும்
அந்த மைச்சனை யன்பின் விடுத்தனன்.
(இ - ள்.) சாலங்காயனைக் கொல்லற்குரிய
செவ்விபெற்று அவன் தலையில் வாள்வைத்த செல்வனாகிய
உதயணன் அரசர்கள் அமைச்சர்களைக் கொல்வதிலர்
என்று அறிவுடையோர் நன்மொழியை நினைந்து சிவந்த
தீயிலிட்டு வடித்த தனது வாளை அழுத்தாமல் அன்புடனே
அந்த அமைச்சனை உயிரோடு விட்டனன் என்க. மந்திரீ,
அந்தமைச்சன: விகாரம். தி - தீ; விகாரம். (51)
உதயணன் யானை குதிரை தேர்ப்படைகளை அழித்தல்
56. திரளு டைக்கரி சேர்ந்து வளைத்தலும்
வரைகள் வீழ்வென வாரணம் வீழவும்
நிரைம ணித்தேர் நிலத்திற் புரளவும்
புரவி கள்பொங்கிப் பூமியில் வீழவும்.
(இ - ள்.) சாலங்காயனுக்கு உயிர்ப்பிச்சையளித்து
விட்டவுடன் கூட்டமான யானைப் படைகள் ஒன்று சேர்ந்து
வந்து உதயணகுமரனை வளைத்துக் கொள்ளவே அவ்வேந்தன்
அவ்ற்றோடும் போர்புரிந்து அந்த யானைகள் மாண்டு
விழவும் பின்னர்த் தேர்ப்படைகள் நிலத்திலே
புரண்டு வீழவும், குதிரைப்படைகள் குருதி பொங்கி நிலத்திலே
வீழவும் என்க. (52)
57. வெஞ்சி னம்மனன் வேறணி
நூறலும்
குஞ்ச ரத்தின்கோட் டின்வா ளொடியவத்
தஞ்ச மின்றிய தாருடை வேந்தனை
வெஞ்சொன் மாந்தர் வெகுண்டுடன்
பற்றினார்.
(இ - ள்.) வெவ்விய சினமுடைய உதயணமன்னன்
இவ்வாறாக வேறுவேறு படைவகுப்புக்களை அழித்து நூழிலாட்டுங்
காலத்தே அவனுடைய கூர்வாள் ஒரு யானைக் கோட்டிற்
பட்டு ஒடிந்ததாக; அதனால் படைக்கலன் இன்றி வறுங்கையனாய்
நின்ற மாலையணிந்த அவ்வுதயணமன்னனை வெவ்விய
சொற்களையுடைய பகைமறவர் பலர் அற்ற நோக்கிச்
சினந்து சுற்றிக் கொண்டனர் என்க. மனன் - மன்னன்.
தஞ்சம் - உதவி. (53)
|