பக்கம் : 11 | | சுரமை நாட்டின் சிறப்பு | கலி விருத்தம் | 7. | மஞ்சுசூழ் மணிவரை யெடுத்த மாமலர் இஞ்சிசூ ழணிநக ரிருக்கை நாடது விஞ்சைநீ ளுலகுடன் விழாக்கொண் டன்னது துஞ்சுநீள் நிதியது சுரமை யென்பவே. | (இ - ள்.) மஞ்சுசூழ் - முகில்களாற் சூழப்பெற்றதும்; மணி - அரிய மணிகளையுடையதுமான; வரை - கோடிக்குன்றம் என்னும் மலையை; எடுத்த - கைகளால் தூக்கிய; மால்அமர் - திருமாலின் கூறாகிய திவிட்டன் அரசு வீற்றிருக்கின்ற; இஞ்சிசூழ் அணி நகர் - மதில்கள் சூழ்ந்த அழகிய போதனம் என்னும் நகரத்துக்கு; இருக்கை நாடது - இருப்பிடமான நாடாவது; விஞ்சைநீள் உலகுடன் - வித்தியாதரர்களுடைய நீண்ட உலகத்தோடு கூடி; விழா கொண்டன்னது - திருவிழாக் கொள்வதுபோன்ற சிறப்பினையுடையது; துஞ்சும்நீள நிதியது - யாவரும் பெரு; ராதலால் இரப்பாரையற்று வீணே பெருகிக்கிடக்கு்; வத்தையுடையது; சுரமை என்ப - சுரமை என்னும் நா உயர்ந்தோர் சொல்லுவர், (எ - று.) மணிவரை என்பதற்கு அழகிய மலை என்று உரை அமையும். மஞ்சுசூழ் என்னும் அடைமொழி மலையின் விளக்கி நிற்கின்றது. அச்சுவக்கிரீவன் முதலிய பகை வென்று திவிட்டன் | | |
|
|