பக்கம் எண் :

பக்கம் : 1141
 

     சுதாரையும் விசயனும் இன்பக் கடலிலே மூழ்க, அமிததேசனும் சோதிமாலையும்
காதலாற் களித்துக் கனவரை உலகம் சேர்ந்தார் என்க.

(707)

 
வேறு
1838. எரிவிசயங் கோவேந்தி 1மன்ன ரென்னும்
அரிவிசயங் 2கெடநின்ற வாணை வேலான்
திருவிசயன் றிருவன்ன செல்வி யோடும்
மருவிசயங் கெழுகோயின் மலர்ந்து புக்கான்.
 
     (இ - ள்.) கோ ஏந்தி - இறைமைத் தன்மையை மேற்கொண்டு மன்னர் என்னும் அரி
- அரசர்கள் என்கிற பகைவர்கள், விசயம்கெட - தோற்றொழிய, நின்ற ஆணை -
நிலைத்து நின்ற ஆணைச்சக்கரத்தை யுடையவனும், எரி விசயம் வேலான் - ஒளிமிக்க
வெற்றியுடைய வேற்படையை ஏந்துபவனும் ஆகிய, திருவிசயன் - செல்வமிக்க விசயன்
என்பான், திருவன்ன செல்வியோடும் - திருமகளை ஒத்த சுதாரை என்பாளுடன், மருவி -
சேர்ந்து, சயம் கெழு கோயில் - வெற்றி பொருந்திய அரண்மனையின்கண்ணே,
மலர்ந்து -மனம் மகிழ்ச்சியாலே மலரப்பெற்று, புக்கான் - புகுந்தான், (எ - று.)

     விசயன் திருமகள் போன்ற சுதாரையோடே மகிழ்ந்து அரண்மனையிலே புக்கான்
என்க.

     கோ - இறைமைத்தன்மை. கோவேந்தி மன்னர் - கோவேந்திகளாகிய மன்னர் என்க.
எரிவிசயம் - விளங்கும் வெற்றி. சயங்கெழு கோயில் - தனக்கு நிகரில்லாதவாறு சிறந்த
அரண்மனை எனினுமாம்.

(708)

 
செவியறிவுறூஉ
1839. இனையனவா மிகுசெல்வ மிங்கு மாக்கிப்
புனைமலர்வா னவர் 3போகம் புணர்க்கும் பெற்றி
4வினையதனின் விளைவின்ன தென்று நாளும்
நினைமின்மோ நெறிநின்று நீர்மை மிக்கீர்.
 
     (இ - ள்.) இனையனவாம் மிகு செல்வம் - இத்தகையவாக மிகுகின்ற பெருஞ் செல்வ
நுகர்ச்சியை, இங்கும் ஆக்கி - இவ்வுலகத்திலேயும் உண்டாக்கித்தந்து, புனைமலர் வானவர்
போகம் புணர்க்கும் பெற்றி - இம்மை தீர்ந்த பின்னரும் கற்பக மலர்மாலையணிகின்ற
தேவர்களுடைய இன்பத்தையும் கூட்டா நிற்கும் தன்மையையுடைய, வினையதனின் விளைவு
 

     (பாடம்) 1 ஏனைய. 2அரிவிசயங் கோவேந்தி நின்ற ஆணை.

     3போகமும். 4 வினையினின்.