பக்கம் எண் :

பக்கம் : 1142
 

இன்னது என்று - நல்வினையினது பயன் இத்தகையது என்று, நாளும் - நாடொறும், நெறி
நின்று - அந்நன்னெறிக்கண்ணே பிறழாது நின்று, நீர்மை மிக்கீர் - பெருமையில்
உயர்ந்தீராகிய நமரங்காள், நினைமின்மோ - நினையுங்கோள், மோ: முன்னிலை அசை,
(எ - று.)

     இத்தகைய பேரின்பங்களையும், அவையிற்றிற்குரிய பொருள்களையும் கூட்டுவிப்பது
நல்வினையே அன்றோ, அந் நல்வினையின் பெருமை இற்றென நாளும் சிந்தனை செய்து,
அந்நெறியிலேயே ஒழுகி இம்மை மறுமைகளைப் பெறுதல், நீர்மை மிக்கார்செயலாம் என்று
தேவர் செவியறிவுறுத்தார் என்க.

சுயம்வரச் சருக்கம் முற்றிற்று
 
பதினொன்றாவது
துறவுச் சருக்கம்


     இது, பயாபதி மன்னன் துறவு மேற்கொள்ளச் கருதிய செய்தியைக் கூறும் பகுதியாம்.
இதன்கண்:-

     செல்வப் பேற்றாலும் மக்கட் பேற்றாலும், பிற பேறுகளானும், பெரிதும் இன்புற்ற
பயாபதி வேந்தன் இத்தகைய சிறப்பைத் தனக்கு நல்கிய நல்வினையையும், தவத்தையும்
வியந்து அவற்றின் பெருமையைப் பாராட்டுதலும், அத்தகைய தவத்தை மேலும் ஆற்ற
வெண்ணி அமைச்சருடன் ஆராய்தலும், அருகக் கடவுளுக்கு விழாவெடுத்தலும், ஒரு பொன்
மண்டபத்திற் பயாபதி ஒரு துறவியைக் கண்டு வணங்குதலும், அத்துறவிபால்
அறங்கேட்டலும், அத்துறவி, நரகரும், விலங்கும், மக்களும். தேவரும் ஆகிய நால்வகைப்
பிறப்பியல்புயம், அவ்வப் பிறப்பில் உயிர்கள் எய்தும் இன்னலும் விரித்துரைத்தலும்,
வீட்டியல்பை நீயே அறிக எனலும், பயாபதி அத்துறவியை மீண்டும் வணங்கி வீட்டியல்பும்,
அதனை எய்தும் நெறியும், உரைத்தருள வேண்டலும், பிறவும் கூறப்படும்.

(709)

 
தோற்றுவாய்
1840. மன்னிய புகழி னான்றன்
     மகன்வழிச் சிறுவர் 1வாயின்
இன்னகை மழலை கேட்டாங்
     கினிதினி 2னிருந்து பின்னர்ப்
3பன்னுமெய்த் துறவிற் புக்கான்
     பயாபதி மன்னர் மன்னன்
4அன்னதன் பகுதி தன்னை
     யறியுமா பகர்த லுற்றேன்.
 
     (இ - ள்.) மன்னிய புகழினான் - நிலை நின்ற பெரும் புகழ் படைத்தவனாகிய,
பயாபதி - பயாபதி என்னும், மன்னர் மன்னன் - அரசர்கட்கு அரசன், தன் மகன் வழிச்
சிறுவர் வாயின் - தன் மகனாகிய திவிட்டனுடைய மரபிற் றோன்றிய மக்களினுடைய,
இன்நகை மழலைகேட்டு
 

     (பாடம்) 1 வாயுள். 2 னிருந்தகாலை. 3 பின்னையங் கென்ன செய்தான் பிரசாபதி
     என்னிற் பின்னை. 4 பன்னினன் குரைத்த மென்ற வுரையினைப்.