பக்கம் : 1268 | | | 2067. | கதிநான்குங் கதிசேரும் 1வாயிலுமிவ் விவையிதனால் விதிமாண்ட 2நரகமும்புன் விலங்குகளுஞ் சேராமை மதிமாண்ட நற்காட்சி 3வழிநின்று தவந்தாங்கில் நிதிமாண்ட பெருஞ்செல்வ 4நீங்காத வியல்பென்றான். | (இ - ள்.) கதி நான்கும் - பிறப்பின் வகைகள் நான்கும், கதிசேரும் வாயிலும் - அப்பிறவிகளிலே எய்துதற்கியன்ற காரணங்களும், இவ்விவை - இவைகள் இவைகள் ஆம் என்று கூறினாம் இதனால் - இங்ஙனம் கூறியவாற்றானே, விதிமாண்ட நரகமும் - ஊழால் பொருந்திய நரகப் பிறப்பினும், புன் விலங்குகளும் - எளிய விலங்குப் பிறப்பினும் சேராமை - பிறவாமலுய்யும் பொருட்டு, மதிமாண்ட நற்காட்சி வழிநின்று - அறிவாலே மாட்சிமைப்பட்ட நற்காட்சியின் பின்னர்த்தாகிய நல்லொழுக்கத்தே நின்று, தவம் தாங்கில் - தவவொழுக்கத்தை மேற்கொண்ட விடத்தே நிதிமாண்ட பெருஞ் செல்வம் - நிதியாலே மாட்சிமைப்படுகின்ற பெரிய நுகர்ச்சியாகிய செல்வம், நீங்காத இயல்பு என்றான் - என்றும் தம்மைவிட்டகலாத இயல்புடைத்தாம் என்று அத்துறவி கூறினான், (எ - று.) கதிநான்கும் அவற்றில் எய்துதற்குரிய காரணங்களும் நரகமுதலிய வற்றின் தன்மையும் கூறிவந்த துறவி அவற்றில் எய்தாமல் உய்ய வேண்டும் எனில் நற்காட்சியுடையராய்த் தவந்தாங்குதல் வேண்டும் என்றார் என்க. | (956) | | 2068. | உறுதிகணன் குரைக்குங்கா லுபசார 5முரைப்பதோ அறுதியில் 6பே ரருளீரென் 7றரசனாங் கடிதொழலும் 8இறுதியிலாப் பேரின்ப மெய்துமா றெடுத்துரைத்தான் மறுதரவில் கதிபடரு மாதவத்து வரம்பாயோன். | (இ - ள்.) உறுதிகள் நன்கு உரைக்குங்கால் - மக்களுக்குச் சிறந்த உறுதிப் பொருள்களை எடுத்துரைக்கும் பொழுது, உபசாரம் உரைப்பதோ - முகமனாகக் கூறுவதேயோ, அறுதி இல் பேர் அருளீர் - முடிவில்லாத பேரருட்பிழம்பாகிய அடிகளே, என்று அரசன் ஆங்கு அடிதொழலும் - என்று கூறி பயாபதி வேந்தன் அத்துறவியின் அடிகளிலே வீழ்ந்து வணங்கா நிற்ப, இறுதியில் பேர்இன்பம் எய்தும் ஆறு - முடிவில்லாத பெரிய வீட்டின்பத்தை எய்தும் வழியையும், எடுத்து உரைத்தான் - எடுத்துக் கூறினான், மறுதரவு இல் கதிபடரும் மாதவத்து வரம்பு ஆயோன் - மீளாத நெறியிலே செல்கின்ற பெரிய தவத்திற்கு எல்லையாய் அமைந்த அத்துறவி, (எ - று.) பயாபதி அத்துறவியைத் தொழுது அடிகளே அடியேன் வீடுபெறு தற்குரிய வழியையும் விளக்கவேண்டும் என்று தொழுதானாக முனிவர் வீடுபேற்றிற்குரிய நெறியை விளக்கப் புகுந்தார் என்க. | (229) | துறவுச் சருக்கம் முற்றிற்று. |
| (பாடம்) 1வாயிலும்மிவை. 2நரகமும்விலங். 3 தலைநின்று. 4 நீங்காதாலி. 5.முரைப்பவோ. 6பொருளினரென். 7றரசனடி. தொழலும். 8இறுதியில். | | |
|
|