பக்கம் எண் :

பக்கம் : 2
 
     தன் கண் விரிந்து என மாறுக. பிறர்போலாது ஓதாதுணர்ந்தவன் என்பார் தன்கண்
விரிந்து என்றார். பொருள் எல்லாம் தன்னுள் அடங்கும்படிதான் ஒன்றாகவே விரிந்து
நிற்றலின் கேவல ஞானத்தை ஒன்றாய்ப் பரந்த உணர்வு என்றார். அஃதாவது மெய்யுணர்வு
என்க.

     மூவுலகத்தும் உள்ள உயிர் முதலிய பொருள்களின்கண் முக்காலத்தும் நிகழும்
நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒருங்கே உணர்பவன் என்பார், ஒழியாது முற்றும் சென்றான்
என்றார். சென்றான் என்பது ஈண்டு உணர்வின் செயன்மேனின்றது. “உலகமூன்றும்
ஒருங்குணர் கேவலத்து அலகிலாத அனந்த குணக்கடல்“ என்றார். யசோதர காவியம்
உடையாரும், “உலகுணர் கடவுள்,“ என்றார். திருத்தக்கதேவரும் ( சீவக - 2713) ஒளிமூர்த்தி
- பேரொளிப்பிழம்பு. வெம்புஞ் சுடரிற் சுடருந் திருமூர்த்தி என்றார், திருத்தக்கதேவரும்
(சீவக - 2) இஃது அருகசரணம்.

     வீடுபேறு எய்துதலே நூற்பயன் ஆதலின் இந்நூல் அறம்பொருள் இன்பம் ஆகிய
மூன்றனையும் நல்கி வீடுபேறும் நல்கும் பெருமையுடைய தென்பதும் குறிப்பாற்
பெறவைத்தனர்.

 (1)

கடவுள் வாழ்த்து முற்றிற்று.

நூல் நுதலிய பொருள்
2. அங்கண் ணுலகிற் கணிவான்சுட ராகி நின்றான்
வெங்கண் வினைபோழ்ந் திருவச்சரண் சென்ற மேனாள்
பைங்கண் மதர்வைப் பகுவாயரி யேறு போழ்ந்த
செங்கண் ணெடியான் சரிதம்மிது செப்ப லுற்றேன்.
 
     (இ - ள்.) அம் கண் உலகிற்கு அணிவான் சுடராகி நின்றான் - அழகிதாகிய
ஞானக்கண்ணையுடைய, சான்றோர் உலகிற்கு அழகிய பேரொளிப் பிழம்பாகத் தோன்றி
நின்றவனாகிய சிரேய தீர்த்தங்கரருடைய; வெங்கண் வினை போழ்ம் - தறுகண்மையுடைய
வினைகளைப் பிளந்து தீர்க்கும் மாண்புடைய; திருவச்சரண் - அழகிய திருவடிகளினது
அருளாட்சி; சென்ற மேல் நாள் - இடையூறின்றி நிகழ்தற்கு இடமான பண்டைக்