பக்கம் எண் :

பக்கம் : 310
 
ஆறாவது
தூதுவிடு சருக்கம்

     [இச் சருக்கத்தின் கண்; மரீசி போதனமா நகரத்திற்குத் தூது வந்து புட்பமாகரண்டம்
என்னும் புதுமலர்ப் பொழிலில் இறங்கியிருக்கிறான். முன்னரே பயாபதி மன்னனால் அங்கு
நிறுத்தப்பெற்ற துருமகாந்தன் மரீசியைக் கண்டு அவனுக்காக ஏற்படுத்தப்பெற்ற
இருக்கையில் இருக்க வைக்கிறான். பயாபதிமன்னன் செய்தியுணர்ந்து தன் மக்களாகிய
விசயதிவிட்டர்களையனுப்பி மரீசியை நகருக்குள் அழைக்கச்செய்து வரவேற்கிறான்.
மரீசி தான் சுவலனசடி மன்னனிடமிருந்து பெற்றுவந்த திருமுகத்தை அரசனிடங்
கொடுக்கிறான். செய்தியைத் தெரிந்த பயாபதி களிப்புமிகுதியால் உரையாடாதிருக்கிறான்.
பயாபதி மன்னனுடைய உள்ளக் கிடக்கையை உணராத மரீசி மாறுபாடாக நினைந்து
சினந்துரைக்கிறான். பயாபதி மன்னன் பதறாமல் பதிலுரை பகருகின்றான். மரீசி
பயாபதியைப் பாராட்டுகிறான். சுவலனசடியரசனது குடிப் பெருமையைக் கூறுகிறான்.
அங்கதன் என்னும் நிமித்திகன் பயாபதி மன்னனுடைய குடிப் பெருமையைக் கூறுகின்றான்.
இருவர் உரைகளையும் கேட்டோர் மகிழ்ச்சியடைகின்றனர். மரீசி பயாபதி மன்னனுக்கும்
சுவலனசடி மன்னனுக்கும் சுவலனசடி மன்னனுக்கும் உள்ள உறவு முறையைப் புராண
வாயிலாக விளக்கிக் காட்டுகிறான். பின்னர் அங்கு ஒருநாள் தங்கியிருந்து சேடிக்குச்
செல்கிறான்; என்னுஞ் செய்திகள் கூறப்பெறுகின்றன.]

பொழிலிலுள்ள மரங்கள், மகிழ், தேமா, சுரபுன்னை புன்கு முதலியன
431. மருவினியன மதுவிரிவன மலரணிவன வகுளம்
திருமருவிய செழுநிழலன செங்குழையன தேமா
வரிமருவிய மதுகரமுண மணம் விரிவன நாகம்
பொரிவிரிவன புதுமலரன புன்குதிர்வன புறனே.
 

     (இ - ள்.) வகுளம் - மகிழ மரங்கள், மரு இனியன - நறு மணத்தால்
இனிமையையுடையன, மதுவிரிவன - தேன்பெருகப் பெறுவன, மலர் அணிவன - மலர்களை
அழகாகப் பொருந்தப் பெற்றுள்ளன; தேமா - தேமா மரங்கள், திருமருவிய - அழகு
பொருந்திய, செழுநிழலன - நல்ல நிழலையுடையன; செங்குழையன - செந்நிறமான
தளிர்களையுடையன; நாகம் - சுரபுன்னை மரங்கள், வரிமருவிய - கோடுகள் பொருந்திய;
மதுகரம்உண-