பக்கம் எண் :

பக்கம் : 404
 

பயாபதி மருசியைப் பாராட்டல்

568. 1 மற்றிம்மாண் புடைய நின்னை யுடையவம் மன்னர் மன்னன்
எற்றைநூற் றெய்த மாட்டா னிதன்றிற நிற்க வெம்மைச்
சுற்றமா நினைந்து நின்னைத் தூதனா விடுத்துச் செல்லப்
பெற்றியாம் பிறவி தன்னாற் 2பெறும்பயன் பெற்ற தென்றான்.

     (இ - ள்.) இன்று இற்றைநாளில், நின்னை முன்வைத்து - உன்னை முன்னிட்டு,
இனிச்சில உரைக்கல் வேண்டா - மேலுஞ்சில செய்திகளைக் கூறவேண்டியதில்லை, யான்
ஒன்றி உரைக்கல் பால உரையையும் - நான் மணம்பொருந்திச் சொல்லக்கூடிய
மொழிகளையும், நியே உணர்தி - நீதானே அறிவாய், வென்றியால், விளங்கு தானை -
வெற்றியோடு விளங்குகின்ற படையை உடைய, விஞ்சை அம் கிழவன் - வித்தியாதரர்கட்கு
உரிய அரசனான சுவலனசடியை, கண் ஆ நின்று - கண்ணாகக் கொண்டுநின்று, யான
வாழ்வது அல்லால் - யான் வாழக்கையை நடத்துவதல்லாமல் நினைப்பு-வேறோர் எண்ணம் இனி இல்லை - இனிமேல் இல்லை, (எ - று.)

 


(பாடம்) 1. பின்னவன். 2. குணங்களு. 3. ளொற்ற. 4. வரசனும். 5.வாய.