(இ - ள்.) அற்றைநாள் - அன்றைக்கு, அங்கு தாழ்ப்பித்து - அந்த நகரத்தில் தங்குமாறு செய்து, உற்றவன் உவப்பக்கூறி - தூதாகவந்த மருசியானவன் மனம் மகிழும்படியான மொழிகளைக்கூறி, அகன்நகர் செல்வம் தன்னோடு - பரந்த நகரினுள்ளே இருக்கின்ற செல்வச் சிறப்புடனே, உரிமை நாடகங்கள் காட்டி - நல்ல நாடகங்களை ஆடுமாறுசெய்து அதனையும் மருசிக்குக் காட்டி, பிற்றைநாள் - மறுநாள், குரவர் தம்மை - தன்னிடமுள்ள பெரியவர்களைப் பார்த்து, பின் சென்று விடுமின் என்று - பின்னே சென்று வழிவிட்டு வருவீர்களாக என்று, அவர்க்கு அருளிச் செய்தான் - அந்தப் பெரியவர்கட்குக் கூறினான். மருசியும் தொழுது |